மகாத்மா காந்தியின் 149-வது பிறந்தநாளை முன்னிட்டு மெரினாவில் காந்தி சிலைக்கு இன்று பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வின் புகைப்படங்களை முதல்வர் எடப்பாடி பயனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த பிறகு, அங்கு போராட்டம் போன்ற எந்த நிகழ்வுக்கும் போலீஸார் அனுமதி வழங்குவதில்லை. அங்கு 24 மணி நேரமும் போலீஸார் கண் காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 8-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நினைவஞ்சலி நிகழ்ச்சிக்காகவும் இலங்கை மீது ஐ.நா. நட வடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சில தமிழ் அமைப்புகள் இன்று மாலை மெரினாவில் கூடவுள்ளதாக தகவல் வெளியானது.
மெரினாவில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 63 எம்எல்ஏக்கள், 3 எம்.பி.க்கள் உள்பட 2 ஆயிரம் திமுகவினர் மீது மெரீனா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அறிஞர் அண்ணாவின் 48_வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் திமுக அமைதி பேரணி நடத்தினர்.
திமுக கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கம் முதல் அண்ணா நினைவிடம் அமைந்துள்ள மெரினா கடற்கரை அமைதி பேரணி நடத்த உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் மீண்டும் ஒன்று கூடுவதாக கூறி அப்பகுதியில் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவை சென்னை போலீசார் விதித்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை இத்தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மர்மநபர்களால் காவல்நிலையம் மற்றும் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது, ஆனால் நிரந்தர சட்டம் வேணும் என்று போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தரப்பில் பல்வேறு முறை விளக்கம் அளிக்கப்பட்டும் போராட்டம் தொடர்கிறது. பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுக்கிறார்கள்.
மர்மநபர்களால் ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்திற்கு தீ வைப்பு.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது, ஆனால் நிரந்தர சட்டம் வேணும் என்று போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தரப்பில் பல்வேறு முறை விளக்கம் அளிக்கப்பட்டும் போராட்டம் தொடர்கிறது. பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுக்கிறார்கள்.
சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மக்களோடு மக்களாக நடிகர் இளைய தளபதி விஜய் கலந்து கொண்டார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அழிக்க துடிக்கும் பீட்டா போன்ற அமைப்புகளை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும். ஜல்லிகட்டு என்பது தமிழர்களின் வீரம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு சார்ந்தது மட்டுமல்லாது அறிவியல் சார்ந்ததும் கூட என்று ஜல்லிகட்டிற்கான ஆதரவுகளை அளித்து வருகின்றனர். இந்த போராட்டம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து புதுவையில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த புதுவையில் உள்ள தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள் ஓன்று சேர்ந்து "போராளிகள்" குழு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த போராளிகள் குழுவின் சார்பில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.பந்த் போராட்டத்தினால் புதுவை பஸ்நிலையம் முழுமையாக வெறிச்சோடி கிடந்தது. தமிழகத்திலிருந்து புதுவை வழியாக செல்லும் அரசு பஸ்களும், புதுவைக்கு வரும் பஸ்களும் வரவில்லை.
ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. நேற்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இச்சந்திப்பில் திருப்திகரமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். இதனால், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசே அவசரச்சட்டத்தை இயற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரவு பகலாக போராடி வருகிறார்கள்.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு ஒரிரு நாட்களில் அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் இன்று அறிவித்தார்.
மெரினாவில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் இன்று காலை திடீரென காவலர் ஒருவர் பங்கேற்றார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். காவலர் போலீஸ் சீருடையிலேயே போராட்டத்தில் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் இன்று விடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்துக்கு கிட்டத்தட்ட முழு அளவில் ஆதரவு காணப்பட்டது. தமிழகம் கிட்டத்தட்ட முழு அளவில் முடங்கிப் போனது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.