புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரவு 8 மணி முதல் 8.15 வரை பெட்ரோல் விநியோகம் நிறுத்தம்!
திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட தமிழக வீரர் சிவச்சந்திரன் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று வீர வணக்கம் செலுத்தினார்!
அனைத்து எதிர்கட்சிகளும் நாட்டு மக்களும் மத்திய அரசுக்கும் பாதுகாப்பு படைக்கும் உறுதுணையாக நிற்கிறோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்!
புல்வாமா தாக்குதலுக்கு பின் தீவிரவாதிகள் மேல் மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள் ; உரிய பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்!
பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாரை தடை செய்தவர்கள் பட்டியலில் சேர்க்க இந்தியாவின் முயற்சிக்கு சீனா தடை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்க ஐ.நா காலதாமதம் செய்வதற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்க வேண்டும் என இந்தியா ஐ.நா -வை வலியுறுத்தியது. ஆனால், மசூத் அசாருக்கு தடை விதிக்க சீனா முட்டுக்கட்டை போட்டது. இதற்கு சில விதிமுறைகளை காரணம் கூறியது. இதற்கான காலக்கெடு, செப்டம்பர் மாதத்துடன் முடிந்த நிலையில், சீனா மேலும் 3 மாதம் காலக்கெடு கோரியுள்ளது. இந்தியாவின் முயற்சிக்கு தடை விதிக்கும் வகையில் சீனா செயல்படுகிறது.
இந்தியாவிற்கு எதிராக முஜாகிதீனுக்கு வழியை திறக்கவேண்டும் என்று பாகிஸ்தான் அரசை பயங்கரவாதி மசூத் அசார் வலியுறுத்தி உள்ளான்.
இந்நிலையில் பதன்கோட் விமானப்படை தளம் மற்றும் உரி ராணுவ முகாம் மீதான பயங்கரவாத தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி மசூத் அசார், இந்தியா விற்கு எதிராக முஜாகிதீனுக்கு வழியை திறங்கள் என்று பாகிஸ்தானை வலியுறுத்தி உள்ளான், காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளான்.
சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவுக்கு வருகை தருவதையடுத்து அணுசக்தி பொருள் விநியோக நாடுகளில் இந்தியா உறுப்பினராகச் சேர பேச்சுவார்த்தைகளுக்குத் தயார் என்று கூறியுள்ளது சீனா.ஆனால், ஜெய்ஷ்-இ-மொகமது அமைப்பைச் சேர்ந்த மசூத் அசாருக்கு ஐநா தடை கோரும் விவாரத்தில் சீனா தொடர்ந்து முட்டுக்கட்டைப் போடும் என்று கூறியுள்ளது. காரணம் ‘பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் எந்த ஒருநாடும் அரசியல் லாபங்களைப் பெறுதல் கூடாது” என்று கூறுகிறது சீனா.
பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்குற்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களை இந்தியாவிடம் அமெரிக்கா வழங்கியது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்திற்குள் கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி புகுந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 7 பாதுபாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் அனைவரும் கொல்லபட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.