தென்னிந்திய சினிமா உலகின் முக்கியமான சினிமா செய்திகள் புகைப்படத் தொகுப்பாக. இதில், தளபதி விஜயின் பீஸ்ட் அப்டேட் முதல் பாகுபலி மூன்றாம் பாகம் வரை பல செய்திகள் புகைப்பட செய்திகளாக இடம் பெற்றுள்ளன...
பிரபாஸின் 'ராதே சியாம்' படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடி இருக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘கபிர் சிங்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள சந்தீப், பிரபாஸ் நடிக்கும் அகில இந்திய திரைப்படமான ஸ்பிரிட்டுக்காக முன்னெப்போதும் திரையில் வந்திராத கதைக்களம் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு அண்டர் வர்ல்ட் அதிரடி திரில்லர் படமாக உருவாகும் 'சலார்' 2021 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஆக்ஷன் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிபுருஷ் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி தான் வெளியாகும் என்றாலும், திரைப்படத்தின் பிரம்மாண்டத்தை கருத்தில் கொண்டு பொருத்துக் கொள்ள வேண்டியது தான்... ஆனால், ஆதிபுருஷின் புகைப்படங்களை பார்த்து ரசிக்கலாம்...
சூப்பர் நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் (Adipurush) திரைப்படத்தில் லக்ஷ்மனாக நடிக்க இருப்பவர் யார் என்ற மிகவும் எதிர்பார்த்த செய்தி விரைவில் வெளியாகி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.