2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ரெயா பரேலி தொகுதியில் சோனியா காந்திக்கு பதிலாக பிரியங்கா வதேரா காங்கிரஸ் வேட்பாளராக நியமிக்கப்படுகிறார? விரைவில் அறிவிப்பு என ஆதாரங்கள் கூறுகின்றன.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலைவழக்கில் தவறாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பரிந்துரைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 26 வருடமாக சிறையில் இருந்த பேரறிவாளன் இன்று பரோலில் விடுவிக்கப்பட்டு ஜோலார்ப்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் பேரறிவாளனும் ஒன்று. இவர் கடந்த 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். 26 ஆண்டுகள் கழித்து பரோல் கிடைத்துள்ளது.
பேரறிவாளனுக்கு சிறைவிடுப்பு அளிக்க வேண்டுமென அவரது தாயார் அற்புதமம்மாள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். இதனையடுத்து பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோலில் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்தது.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீரபூமியில் இன்று காலை முதல் முக்கிய
பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராஜிவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், அவரது தங்கை பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரும் வந்து மரியாதை செலுத்தினர்.
ராஜீவ் காந்தியின் கொலையை பற்றி சிஐஏ 5 ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1986-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ராஜீவுக்குப் பிறகு இந்தியா என்று தொடங்கும் தலைப்பில் 23 பக்க அறிக்கையை சிஐஏ தயாரித்து இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையின் முதல் வரியில்:- பதவிக் காலம் முடிவடைவதற்குள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. எனினும், அதன் பிறகு இடம்பெற்ற வாசகங்களில், ராஜீவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.