புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் இருந்து ரெமெடிசிவிர் ஊசி பற்றாக்குறை பற்றிய செய்திகளும் பரவி வருகின்றன.
இதைத் தொடர்ந்து, ரெம்டிசிவிர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, உற்பத்தியை அதிகரிக்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடர்ந்து இரண்டு நாட்கள் மருந்து நிறுவனங்களுடன் சந்திப்பை நடத்தி, அது தொடர்பான வழிமுறைகளை வெளியிட்டார். ரெம்டெசிவிரின் உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதன் விலையை குறைக்கவும் அரசாங்கம் நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.
உற்பத்தி இந்த அளவிற்கு அதிகரிக்கும்
தற்போது, இந்தியாவில் ஏழு நிறுவனங்கள் சேர்ந்து 38.80 லட்சம் ரெம்டெசிவிர் (Remdesivir) டோஸ்களை உற்பத்தி செய்கின்றன. மேலும் ஏழு தளங்களில் 6 நிறுவனங்கள் மூலம் 10 லட்சம் டோஸ் கூடுதலாக உற்பத்தி செய்ய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இது தவிர, மற்றொரு நிறுவனம் மாதத்திற்கு 30 லட்சம் டோஸ் என்ற விகிதத்தில் ரெமாடெசிவிர் தயாரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தொடங்கியவுடன், ஒவ்வொரு மாதமும் இந்த மருந்தின் 78 லட்சம் டோஸ் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும்.
ALSO READ: Sputnik-V தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு நிபுணர் குழு பரிந்துரை
ரெமிடிசிவிரின் ஏற்றுமதியை இந்தியா தடை செய்தது
ஏப்ரல் 11 ஆம் தேதி இந்திய அரசு (Indian Government) ரெம்டெசிவிர் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. ரெம்டெசிவிரை ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக உள்நாட்டு பயன்பாட்டிற்கு தயாராக வைத்திருக்க வேண்டும் என அரசாங்கம் கூறியுள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, ஏற்றுமதி செய்யப்பட தயாராக இருந்த 4 லட்சம் டோஸ் ரெம்டெசிவிரின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு, அவை இந்திய சந்தைகளுக்கு அனுப்பப்பட்டன. இது தவிர, ஈ.ஓ.வில் தயாரிக்கப்படும் ரெமடெசிவிரும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நிறுவனங்களே விலையைக் குறைத்தன
பிரதமர் நரேந்திர மோடியின் (PM Modi) முறையீட்டைத் தொடர்ந்து, ரெம்டெசிவிரை உருவாக்கும் நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து விலையைக் குறைத்தன. மேலும் மருந்துகளின் விலையை ரூ .3500 என்ற விகிதத்தில் நிர்ணயித்தன. கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற மருந்து நிறுவனங்கள் இதன் மூலம் தங்களாலான உதவியை செய்துள்ளன. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதை முதலில் உறுதி செய்யுமாறு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கறுப்பு சந்தையில் ரெம்டிசிவிரின் பயன்பாடு மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்கி வைப்பது ஆகியவற்றை நிறுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கம் தனது நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. NPPA (தேசிய மருந்து விலை ஆணையம்) இந்த முழு விஷயத்தையும் கண்காணித்து வருகிறது.
ALSO READ: Covidஐ அடியோடு விரட்ட 5 மருந்துகள் இன்னும் ஐந்து மாதத்தில்...
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR