ஆன்லைனில் கிரிப்டோ கரன்சியில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி ஜெகன் ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் மூலம் சுமார் 20 லட்ச ரூபாய் வரை பணத்தை பெற்றுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... இருவரையும் காவல்நிலையத்தில் துன்புறுத்தியதோடு, உயிரழந்த பின்னர் ஆவணங்களை மாற்றியதாக சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் சாட்சியம்
இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி நகரில் விசைப்படகுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் 'ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு' என கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் சில அரசியல் கட்சி தலைவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இந்தகட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனாவின் தாக்கத்தால், ஆக்சிஜன் தேவை திடீரென்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பலர் உயிரிழந்த சம்பவங்களும் வெளிவந்தன.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அத்தியாவசியமான ஆக்சிஜன் தேவைகள் அதிகரித்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறப்பது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தியும் பண்டாரம்பட்டி கிராம மக்கள் சார்பாக இன்று கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு முழுமையாக கையகப்படுத்தி, அதன் பிறகு ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஆலையை திறக்கலாம் எனவும் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.