தமிழ்நாட்டில் மொத்தம் 233 தொகுதிகள், அதில் 232 தொகுதிகளில் தேர்தலும் மற்றும் ஒரு தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட 3700க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன.
சட்டசபை தேர்தலில் 2016
தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. வாக்கு பதிவு 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே மக்கள் நீண்ட வரிசைகளில் வாக்குச் சாவடிக்கு வெளியே நின்டிருந்தனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 233 தொகுதிகள், அதில் 232 தொகுதிகளில் நடைபெறுகிறது மற்றும் ஒரு தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட 3700க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்தில் 18% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் 100 சதவித வாக்கினைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஓட்டு பதிவு காலை தொடங்கியது. வாக்குப் பதிவு துவங்கிய முதலே பெரும்பாலான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் போட்டனர். குறிப்பாக நடிகர் மற்றும் நடிகைகள் தங்கள் வாக்குகளை காலையிலே செலுத்தினர்.
வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். தேர்தல் குறித்து வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் அனைத்துமே நாடகமானது. இந்த கருத்துக்கணிப்புகள் எல்லாம் மக்கள் மாற்றி எங்கள் கூட்டணி வெற்றி பெற செய்வார்கள்.
திமுக மற்றும் அதன் தலைவர் கருணாநிதிக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தாக்குதல்.
திமுக மற்றும் அதன் கூட்டனி கட்சிகள் ஆட்சி செய்த காலத்தில் மாநிலத்தின் நலனுக்காக எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினர்.
மேலும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் போடும் ஒவ்வொரு வாக்கும் "மக்களின் செழிப்புக்கு எதிரான வாக்கு" எனவும் கூறினார்.
இலங்கை தமிழர்கள் பிரச்சினை, மாநில நதிநீர் பிரச்சினை மற்றும் மின் உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளில் எந்தவித முன்னேற்றம் திமுக செய்யவில்லை என்று குற்றம் சாட்டினர்.
நடிகர் செந்தில் இந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சிலர் செந்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துவிட்டதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பினார்கள்.
இதை அறிந்த செந்தில் வதந்திக்கு முற்று புள்ளி வைத்தார். மேலும் அவர் கூறியது. வாட்ஸ்-அப்பில் வரும் செய்தியை யாரும் நம்பவேண்டாம். அது வெறும் வதந்தி. எனக்கு வேண்டாத சிலர் இவ்வாறு பண்ணியிருக்கிறார்கள். ஆண்டவன் புண்ணியத்திலும் மற்றும் "அம்மா" புண்ணியத்திலும் நான் நன்றாக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
ரஜினியின் கபாலி டீசரை பயன்படுத்தி அதில் சில மாற்றங்கள் ஏற்படுத்தி அதிமுகவை விமர்சிப்பது போலவும் திமுகவை ஆதரிப்பது போலவும் உள்ளது. அந்த வீடியோ திமுகவை சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.
மே தினத்தன்று செல்வி ஜெயலலிதா தேர்தல் பேரணியில் உரையாற்றியது.ஞாயிறன்று தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதா தனது அரசாங்க ஊழியர்களுக்கு பல நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார். தொழிலாளர்களுக்கு அனைத்து வகையான நன்மைகள் கிடைக்க எனது அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் Rs.568 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்திருக்கிறது.
ஆளும் அதிமுக பொது செயலாளர் இந்த ஜெயலலிதாவும் தனது அரசாங்கம் 2011ல் கூறப்பட்ட அனைத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது மட்டுமில்லாமல் கடந்த தேர்தலில் அறிக்கையில் இல்லாத திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன என்றார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே 16ம் தேதி நடைபெறயுள்ளது. அ.தி.மு.க.வை தவிர அனைத்து கட்சிகளும் தமது தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இந்தநிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பிரச்சாரக் கூட்டதின் போது முதல்வர் செல்வி ஜெயலலிதா வெளியிட்டார். அதில் தொலைநோக்கு வளர்ச்சி திட்டங்களும் இடம் பெற்று இருந்தன. பெண்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவசதிட்டங்களும் இருந்தன.
தேர்தல் அறிக்கையின் விவரங்கள்:-
திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டுச் சேர்ந்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. வாக்கு சேகரிப்பதற்காக ராகுல்காந்தி மே 7 தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
ராகுல்காந்தி மே 7ம் தேதி மற்றும் 1௦ம் தேதி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யவார். மேலும் பாண்டிச்சேரியில் 1௦ம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
கேரளாவிலும் மே 11ம் தேதி மற்றும் 12ம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று காங்கிரஸ் மேலிடம் தெரிவித்து உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.