யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிமுறைகளில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விளக்க எமது செய்தியாளர் தமிழரசன் தொலைபேசி வாயிலாக இணைந்துள்ளார்.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் மக்களுக்குத் தேவையான அனைத்துப் பணிகளும் பொங்கல் பண்டிகைக்குள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மத்திய அரசு உதவியோடு அமெரிக்காவில் உள்ள தொன்மையான சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறை முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஓசூரில் முன் விரோதம் காரணமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி உட்பட 2 பேர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மோசமான இந்த சம்பவத்தின் பின்னணியை விரிவாக காணலாம்.
பேரிடர் பற்றி உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன தெரியும் என்றும், முக்கிய அமைச்சர்கள் இருக்கும் போது மீட்பு பணிக்கு உதயநிதியை அனுப்புவது ஏன் என்றும் விருதுநகரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கனமழையால் தென் மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நெல்லை சந்திப்பு வரை ரயில் போக்குவரத்து சீராகியுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.