உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் 191 ரன்கள் இலக்கை அடைந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டி-20 போட்டி நேற்று கிங்ஸ்டன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் மற்றும் தவான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பவுலர்களை பதம் பார்த்தனர்.
> 22 பந்துகளில் 39 ரன்களை குவித்த கோலி 6-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
> 12 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட தவான் 4 பவுண்டரிகளை விளாசி 23 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
கடைசி ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்தியா.
நேற்று நடைபெற்ற கடைசி மற்றும் 5_வது ஒருநாள் கிங்ஸ்டனில் நடைபெற்றது. டாஸ்ஸில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
50 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற 206 ரன்கள் தேவைப்பட்டது.
தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியால் 37_வது ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்து இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி கிங்ஸ்டனில் இன்று நடக்கிறது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
முதலாவது ஆட்டம்:- மழையால் பாதியில் ரத்தானது
இரண்டாவது ஆட்டம்:- இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்றாவது ஆட்டம்:- இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4-வது போட்டி:- வெஸ்ட் இண்டீஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 2 போட்டிகளில் வென்று 2-1 என முன்னிலை வகிக்கிறது. 5-வது போட்டி நாளை நடைபெற உள்ளது. அதன் பின்னர் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது.
இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் முன்னணி அதிரடி ஆட்டகாரரான கிறிஸ் கெயிலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிக்கு கார்லோஸ் பிரத்வெய்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்களான எவின் லீவிஸ் மற்றும் கைல் ஹோம் தலா 35 ரன்களை குவித்தனர். நிதான துவக்கத்தை அளித்த ஜோடியை பாண்டியா பெவிலியனுக்கு அனுப்பினார். துவக்க ஜோடியை தொடர்ந்து களமிறஹ்கிய ஷை ஹோம் 25 ரனக்ளுடனும், ராஸ்டன் சேஸ் 24 ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி குவித்தது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1-0 என்ற முன்னிலையில், 3-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதின.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சையே தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய வீரர் ரஹானேவும், ஷிகர் தவானும் தனது பேட்டிங்கை தொடங்கினர்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் ஒரு நாள் போட்டி நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் ரகானே, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர்.
இந்தியா 38 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை விடாததால் மீதி ஆட்டம் கைவிடப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர். இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் மற்றும் 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. கிங்ஸ்டனில் நடந்த 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன் படி இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.