வெள்ளமாய் ஓடி வீணாகும் Red Wine: Viral Video-வைப் பார்த்து ஆதங்கத்தில் ‘குடி’மகன்கள்!!

ஸ்பெயினின் வில்லாமாலியாவில் உள்ள ஒரு ஒயின் ஆலையில் ஒரு சேமிப்பு தொட்டி சேதமடைந்து வெடித்ததால் 50,000 லிட்டர் சிவப்பு ஒயின் வீணாகப் போனது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 27, 2020, 02:53 PM IST
  • ஒரு ஒயின் ஆலையில் ஒரு சேமிப்பு தொட்டி சேதமடைந்து வெடித்ததால் 50,000 லிட்டர் சிவப்பு ஒயின் வீணாகப் போனது.
  • சிவப்பு ஒயின் மெட்டல் தொட்டியிலிருந்து வெளியேறி தொழிற்சாலை முழுவதும் வெள்ளமாகப் பெருக்கெடுத்தது.
  • தகவல்களின்படி, இந்த வீடியோ ஒரு ஊழியரால் எடுக்கப்பட்டது.
வெள்ளமாய் ஓடி வீணாகும் Red Wine: Viral Video-வைப் பார்த்து ஆதங்கத்தில் ‘குடி’மகன்கள்!! title=

நீங்கள் மது அருந்துபவராக இருந்தால், இந்த செய்தி உங்களை கலங்கச் செய்யலாம். இதைப் பார்த்து உங்கள் மனம் பதபதைக்கலாம்.

ஸ்பெயினின் (Spain) வில்லாமாலியாவில் உள்ள ஒரு ஒயின் ஆலையில் ஒரு சேமிப்பு தொட்டி சேதமடைந்து வெடித்ததால் 50,000 லிட்டர் சிவப்பு ஒயின் (Red Wine) வீணாகப் போனது. சிவப்பு ஒயின் மெட்டல் தொட்டியிலிருந்து வெளியேறி தொழிற்சாலை முழுவதும் வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது (Viral Video).

ஐபீரிய தீபகற்பத்தின் (Iberian Peninsula) தென்கிழக்கில் அமைந்துள்ள விட்டிவினோஸ் ஒயின் ஆலையில் (Vitivinos Winery) இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. 1969 முதல் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த ஒயின் ஆலையில் 1,570 ஹெக்டேர் திராட்சைத் தோட்டங்கள் உள்ளன.

இந்த ஒயின் வெள்ளத்தின் கிளிப் முதன்முதலில் ட்விட்டரில், உள்ளூர் வானொலி நிலையமான ரேடியோ அல்பாசெட்டேவால் செப்டம்பர் 25 அன்று பகிரப்பட்டது. இது இப்போது ஆயிரக்கணக்கான கமெண்டுகளுடன் 8 மில்லியனுக்கும் அதிகமான வியூசைப் பெற்றுள்ளது. சில பயனர்கள் 1980 திகில் படமான 'தி ஷைனிங்' திரைப்படத்தின் காட்சியுடன் இந்த வைன் வெள்ளத்தின் காட்சியை ஒப்பிட்டனர்.

தகவல்களின்படி, இந்த வீடியோ ஒரு ஊழியரால் எடுக்கப்பட்டது. அவருக்கு கசிவைத் தடுக்க வழி ஏதும் தோன்றாததால், அவர் இதை வீடியோ எடுத்தார்.

வீடியோவில் காணப்படுவது போல, மதுபானம் கசிந்து ஓடுவதை ஊழியர்கள் செய்வதறியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த கசிவு ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை என்றாலும், உள்ளூர் ஊடகங்கள் ஒரு தொட்டியில் ஏற்பட்ட சேதம் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று செய்தி வெளியிட்டன.

ALSO READ: Viral Video: ‘வேண்டாம்…..விட்டுடு’ என வடிவேலு style-ல் அழும் சீன வீரர்கள்!!

இந்த ஆண்டு உலகளவில் கவனத்தை ஈர்த்த ஒரே பெரிய மது கசிவு இது மட்டுமல்ல.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், 1,00,000 கேலன் கேபர்நெட் சௌவிக்னான் கலிபோர்னியா (California) ஆற்றில் கலந்தது. சோனோமா கவுண்டி திராட்சைத் தோட்டத்திலுள்ள (Vineyard) ஒரு தொட்டியில் இருந்து சுமார் 97,000 கேலன் சிவப்பு ஒயின் கசிந்தது.

ஏப்ரல் மாதத்தில், மொடெனாவுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய இத்தாலிய (Italy) கிராமத்தில் வசிக்கும் மக்கள் தண்ணீருக்குப் பதிலாக பிரகாசமான சிவப்பு ஒயின் தங்கள் குழாய்களில் இருந்து வந்ததால் திகைத்துப் போனார்கள். தகவல்களின்படி, ஒரு ஒயின் ஆலை (Winery) தற்செயலாக உள்ளூர் நீர் அமைப்பில் மதுவை செலுத்தியதால் இப்படி ஏற்பட்டது.  

ALSO READ: Watch: வைரலாகும் எலி குட்டிகளை உயிருடன் உண்ணும் இளைஞர்..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News