அழகாக இருக்க வேண்டும் என்ற பேராசையில், சிலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட வேண்டிய ஒன்றைச் செய்துவிடுகிறார்கள். சீன சூப்பர் ஸ்டார் காவ் லியுவுக்கு இந்த சோகம் நடந்துள்ளது. ஏற்கனவே மிகவும் அழகாக இருக்கும் அவர், ஆனால் இன்னும் அழகாக இருக்க வேண்டும் என்ற பேராசையில் ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சையை நாடினார்.
காவ் லியு 24 வயதிலேயே சீனாவின் (China) வேகமாக பிரபலமான கலைஞராக கருதப்பட்டார். ஆனால் இப்போது அவள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு வாழ்க்கை பாழாகி விட்டது. ஏனெனில் அறுவை சிகிச்சை தோல்வி அடைந்ததோடு அவரது மூக்கு இப்போது கருப்பு நிறத்தில் உள்ளது.
காவ் லியு தனது சோகக் கதையை சீன சமூக ஊடக பக்கமான வெய்போவில் பகிர்ந்து கொண்டார். இது குறித்த தகவல்களை அளித்து தனது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவரது மூக்கு அத்தகைய நிலைக்கு மாறிவிட்டது, அவரது வாழ்க்கை நரகமாக மாறத் தொடங்கியது என்று அவர் கூறினார்.
காவோவின் மூக்கின் முன் பகுதி கருப்பு நிறமாகிவிட்டது. அதன் திசுக்கள் சேதமடைந்துள்ளன. இப்போது மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று லியு கூறினார். இந்த காரணத்தினால் பட வாய்ப்பையும் இழந்த அவர், தற்போது தனது நிலைமையை எண்ணி நொந்து போயிருக்கிறார்.
குவாங்சோ நகரில் உள்ள ஜி ஜி ஜி குவாங் கிளினிக்கில் தனது அறுவை சிகிச்சை செய்ததாக லியு கூறினார். சீன சூப்பர் ஸ்டார் ஆன இந்த நடிகைக்கு அவரது நண்பர் ஒரு பிளாஸ்டிக் சர்ஜனை அறிமுகப்படுத்தினார். அவர் செய்த அறுவை சிகிச்சை நடிகையின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. இதற்காக இவர் செலவழித்த பணமும் கொஞ்சம் நஞ்சமல்ல. 61,800 அமெரிக்க டாலர்கள் செலவழித்துள்ளார்.
காவோ லியுவுக்கு வெய்போவில் 5 மில்லியனுக்கும் அதிகமான பலோயர்ஸ் உள்ளனர். முழு சோக கதையையும் அவர் தம்மைப் பின்பற்றுபவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
ALSO READ | விபத்தில் சிதைந்த முகம் கைகள்... முகம், கை மாற்று சிகிச்சை அளித்தது மறுவாழ்வு..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR