19:30 29-10-2018 : தெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இலங்கை பெற்றோலியத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்
தெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக இலங்கை பெற்றோலியத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்!
தெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் நடைப்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பிரதாபமாக உயிரிழந்துள்ளார், மேலும் மூவர் படுகாயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர்.
தெமட்டகொடையிலுள்ள, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைமையகத்திற்கு அருகில் நேற்றைய தினம் (அக்டோபர் 28) அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் 34 வயதான பெற்றோலிய கூட்டுத்தான ஊழியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Sri Lankan Petroleum Minister Arjuna Ranatunga (file pic) arrested after his guards opened fire on protestors yesterday: AFP pic.twitter.com/Zi5eA5K8G6
— ANI (@ANI) October 29, 2018
இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார். இச்சம்பவத் தொடர்பில், அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யுமாறு வலியுறுத்தி, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஒரு சங்கங்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க-வை கொழும்பு குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தெமட்டகொடையிலுள்ள, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அர்ஜுன ரணதுங்க சென்றிருந்த போது அங்கு அமைதியற்ற சூழ்நிலை தோன்றியுள்ளது. இதனையடுத்து அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளால் துப்பாக்கிச்சூட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர் ரணதுங்கா தெரிவிக்கையில்,.. தனது அமைச்சரவை தொடர்பாக விஷயத்தில் சம்பவம் நடைப்பெற்ற இடத்திற்கு சென்றிருந்து போது தடிகளடுன் வந்த மர்ம நபர்கள் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாகவும், அவ்வர்களை கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
தெமட்டகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.