சிட்னி: இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த முடிவை ஆஸ்திரேலியா மாற்றியது. இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை ஏற்றுக் கொள்வது என்ற முக்கியமான விஷயத்தை அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தெரிவித்தார். மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கப்போவதில்லை என்று தெரிவித்த ஆஸ்திரேலியா, முந்தைய பழமைவாத அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய முடிவை மாற்றி அமைத்தது.
இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள் மூலம் நகரின் நிலை தீர்மானிக்கப்பட வேண்டும், ஒருதலைப்பட்சமான முடிவுகளால் அல்ல என்று வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறினார். "இந்த வாய்ப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அணுகுமுறையை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்," என்று அவர் கூறினார். "ஆஸ்திரேலியாவின் தூதரகம், டெல் அவிவில் உள்ளது இந்த நிலையே தொடரும்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | அணு குண்டுவீச தயாராகிறதா ரஷ்யா... அதிகரிக்கும் பதற்றம்!
2018 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் ஸ்காட் மோரிசன் தலைமையிலான அரசு, மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் விஷயத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் முடிவை பின்பற்றினார். ஆனால், இந்த முடிவுக்கு ஆஸ்திரேலியா முழுவதும் கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் முடிவை பல நாடுகள் எதிர்த்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. "இது ஆஸ்திரேலிய சமூகத்தின் ஒரு பகுதியில் மோதலையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் அறிவேன், இன்று அரசாங்கம் அதைத் தீர்க்க முயல்கிறது" என்று தற்போது, பழைய அரசின் முடிவை திரும்பப் பெற்றுக் கொண்ட ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தெரிவித்தார்.
Australia denies reversal of recognition of Jerusalem as Israeli capital
Read @ANI Story | https://t.co/oonc8HYfsq#Jerusalem #Israel #Israeli pic.twitter.com/fYD3L2btaN
— ANI Digital (@ani_digital) October 18, 2022
கணிசமான யூத சமூகம் உள்ள சிட்னி புறநகர் பகுதியில் நடந்த ஒரு முக்கியமான இடைத்தேர்தலுக்காக, மாரிசன் அரசாங்கம் இந்த முடிவை எடுத்ததாக, முந்தைய ஆட்சியை அவர் குற்றம் சாட்டினார்."இது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? வென்ட்வொர்த் மற்றும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இது ஒரு கேவலமான நாடகம்" என்று அவர் தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு ஜெருசலேமை, இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த ஆஸ்திரேலிய அரசின் முடிவால், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட முஸ்லிம்கள் பெரும்பான்மை நாடான அண்டை நாடான இந்தோனேசியாவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை தற்காலிகமாக தடம் புரள செய்தது. இஸ்ரேலியர்களாலும், பாலஸ்தீனியர்களாலும் உரிமை கொண்டாடப்படும் ஜெருசலேம் பல தசாப்தங்களாக சர்ச்சைக்குள்ளான நகரமாக இருந்து வருகிறது.
பெரும்பாலான வெளிநாட்டு நாடுகள் நகரத்தின் இறுதி நிலை குறித்த சமாதானப் பேச்சுக்களை முன்கூட்டியே தீர்மானிக்கும் என்ற அச்சத்தில், ஜெருசலேம் நகரில் தூதரகங்களை வைப்பதை தவிர்த்து வருகின்றன.
மேலும் படிக்க | கோவிடிலும் தில்லுமுல்லு செய்த டிரம்ப்! கிடுக்கிப்பிடி விசாரணையில் அமெரிக்க முன்னாள் அதிபர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ