Canada Election: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ‘வெற்றி’; ஆனால் ‘பெரும்பான்மை’ வெற்றி இல்லை

கனடா பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்று இருப்பினும், இன்னும் பெரும்பான்மை பெறவில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 21, 2021, 12:38 PM IST
  • கனடா பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
  • ட்ரூடோவின் கட்சி பெரிய வெற்றியை பெறவில்லை
  • வேறு எந்த கட்சியையும் விட லிபரல் கட்சி அதிக இடங்களை வென்றது.
Canada Election: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ‘வெற்றி’; ஆனால் ‘பெரும்பான்மை’ வெற்றி இல்லை title=

Canada Election 2021: கனடா பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். திங்களன்று நடந்த தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு கனடிய மக்கள் பெரும்பாலான இடங்களில் பெரும் வெற்றி பெற செய்தாலும், பெரும்பான்மை வெற்றி இல்லை. 

ஜஸ்டின் ட்ரூடோ. தனது மறைந்த தந்தையும் முன்னாள் பிரதமருமான பியரி ட்ரூடோவின் பெயர் மற்றும் புகழ் காரணமாக 2015 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் நடந்த தேர்தலிலும் அவருக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால், ஆட்சி நடத்தது. கத்தி மேல் நடப்பது போல் இருந்தது. இந்நிலையில், பதவிக் காலம் முடிவடைய இரு ஆண்டுகள் உள்ள நிலையில், பெரும்பான்மை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் முன் கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்தார். ஆனால், அவர் நினைத்தது நடக்கவில்லை.

கனடா பொதுத் தேர்தலில், தற்போதைய நிலவரப்படி, லிபரல் கட்சி 156 இடங்களிலும், கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களிலும், பிளாக் குபெகோயிஸ் 32 இடங்களிலும், இடதுசாரி புதிய ஜனநாயக கட்சி 28 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்ற கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் ட்ரூடோ ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை. ஆட்சி அமைக்க 170 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 

ALSO READ | அதிசயம்! இறந்த 45 நிமிடத்திற்கு பின் ‘உயிர்த்தெழுந்த’ பெண்..!!

ட்ரூடோ, அரசியல் லாபத்திற்காக, இரண்டு ஆண்டு காலத்திற்கு முன்னதாவே தேர்தலை நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். "நாட்டின் நிலைமையை புரிந்துகொள்வதில் ட்ரூடோ ஒரு முட்டாள்தனமான தவறு செய்தார்" என்கிறார் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் கனேடிய வரலாறு மற்றும் சர்வதேச உறவுகளின் பேராசிரியர் ராபர்ட் போத்வெல். 

மறுபுறம், தற்போது உலகின் பெரும்பாலான குடிமக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் ஒன்றாக கனடா உள்ள நிலையில், எதிர்கட்சிகள் தொற்றுநோய்க்கு எதிரான நாட்டின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் என்று ட்ரூடோ நாட்டு மக்களை எச்சரித்தார். கனடா மக்களுக்கு அறிவியலை நம்பும் அரசு தேவை" என்று ட்ரூடோ ஞாயிற்றுக்கிழமை மாண்ட்ரீலில் தனது இறுதி பிரச்சாரத்தில் கூறினார்.

ALSO READ | ஆப்கானில் அட்சி அமைக்க முடியாமல் திணறும் தாலிபான்; சாதி பிரச்சனை தான் காரணமா..!!!

ஆட்சி அமைக்க பெற 170 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்கிற நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி 156 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளதால், அதிகாரப்பூர்வமாக முழு முடிவு வெளியான பின்னரே நிலைமை தெளிவாகும்

கனடாவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2019 நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | பாதுகாப்பு துறையில் ஏற்றுமதியாளராக உருவாகி வரும் இந்தியா: பிரதமர் மோடி புகழாரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News