காஷ்மீர் விவகாரத்தில் தங்களை சீனா ஆதரிப்பதாக பாகிஸ்தான் கூறியதை சீனா மறுத்துள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மீது வெளிநாடுகள் கண்டனம் தெரிவித்தால், அப்போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும். ஆயுதம் ஏந்தாத மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதை ஏற்க முடியாது. காஷ்மீர் மாநில மக்களின் விருப்பப்படி தீர்வு காண வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சகத்தின் யு போரென் கூறியதாக பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், இதனை சீனா மறுத்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்:- பாகிஸ்தான் மீடியாக்கள் வெளியிட்ட செய்தி பற்றி எனக்கு தெரியாது. இந்த விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாகவும் நிலையாகவும் உள்ளது. காஷ்மீர் பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் அமைதியாகவும் முறையாகவும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் எனக்கூறினார்.