சர்ச்சைகளின் நாயகன் ட்ரம்பின் சர்ச்சை ட்வீட்... உடனே நீக்கப்பட்ட காரணம் என்ன...!!!

அதிபர் டிரம்ப் தனது ஆதரவாளர்களுக்கும் எதிரிகளுக்கும் இடையிலான மோதலின் சர்ச்சைக்குரிய வீடியோவைப் பகிர்ந்தார்.

Last Updated : Jun 29, 2020, 05:31 PM IST
  • அதிபர் டிரம்ப் 'White Power' என்ற கோஷம் எழுப்பும் வீடியோவை ட்வீட் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
  • ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளர் ஆன ஜோ பிடன் இதற்கு கண்டனம் தெரிவித்தார்.
  • சர்ச்சை எழுந்த பிறகு இந்த ட்வீட் உடனடியாக நீக்கப்பட்டது.
சர்ச்சைகளின் நாயகன் ட்ரம்பின் சர்ச்சை ட்வீட்... உடனே நீக்கப்பட்ட காரணம் என்ன...!!! title=

உடனடியாக நீக்கப்பட வேண்டிய அளவிற்கு சர்ச்சைக்குரிய வீடியோவை டிரம்ப் ட்வீட் செய்ததால், வெள்ளை மாளிகை உடனடியாக அதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளர்களுக்கும் எதிரிகளுக்கும் இடையிலான மோதல் தொடர்பான வீடியோவைப் பகிர்ந்தார். அதில் ஒருவர் வலிமை மிக்க வெள்ளையர்கள் என்ற அர்த்தத்தில் “White Power" என்று கோஷமிடுவதை காண முடிந்தது.

புதுடெல்லி (New Delhi): சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டு அமெரிக்க (America) அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மீண்டும் விவாதத்திற்கு காரணமாக ஆகியுள்ளார். இந்த வீடியோவில், அவரது ஆதரவாளர் ஒருவர் ”White Power" என்ற கோஷம் எழுப்புவதைக் காணலாம். இது வெள்ளை இன மக்கள் சிறந்தவர்கள் என்ற அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால், ட்வீட் செய்த உடனேயே, ட்ரம்ப் அந்த வீடியோவை நீக்கி விட்டது.

ALSO READ | தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்த காங்கிரஸ்... லடாக் கவுன்சிலர் அதிர்ச்சி தகவல்...!!!

வீடியோவில்  எழுப்பப்பட்ட கோஷத்தை ட்ரம்ப் கேட்கவில்லை என்று வெள்ளை மாளிகை இந்த விஷயத்தை தெளிவுபடுத்தியது. ட்ரம் ஞாயிற்றுக் கிழமை அன்று, கிராமத்தை சேர்ந்த பிரபலங்களுக்கு மிக நன்றி என ட்வீட் செய்திருந்தார். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டிம் ஸ்கவுட், "டிரம்ப் அந்த வீடியோவை மறு ட்வீட் செய்யக்கூடாது என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை, அதை அவர் அகற்ற வேண்டும்" என்றார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில், குடியரசு கட்சியை சேர்ந்த ஸ்காட் மட்டுமே கறுப்பினத்தை சேர்ந்த உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று தான் நினைப்பதாகவும், சர்ச்சை அதிகரித்த சிறிது நேரத்தில் பிறகே, டிரம்ப் அந்த வீடியோவை நீக்கினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெள்ளை மாளிகையின் ( White House) செய்தித் தொடர்பாளர் ஜூட் டீரெ ஒரு அறிக்கையில், அதிபர் டிரம்ப் கிராமங்களை அதிகம் விரும்புபவர் அவர் கிராமத்தின் மிகப்பெரிய  பெரிய ரசிகர் என்று கூறினார். வீடியோவில் கோஷமிட்டத்தை அவர் கேட்கவில்லை. அவர் தனது ஆதரவாளர்களின் உற்சாகத்தை மட்டும் தான் பார்த்தார் என்று அவர் தெளிவு படுத்தினார்.

ALSO READ | காற்றில் பறந்த ஜி ஜின்பிங்-ன் வாக்குறுதிகள்… உலக மன்றத்தில் சீனாவின் நிலை என்ன ….!!!

இதற்கிடையில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளர் ஆன ஜோ பிடன் இந்த சர்ச்சை தொடர்பாக ட்ரம்பிற்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.

முன்னாள் துணை அதிபர்  ட்வீட் செய்து, 'நாங்கள் நாட்டின் ஒற்றுமைக்காக போராடுகிறோம், ஆனால், அதிபர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் இந்த போரில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.” என குறிப்பிட்டுள்ளார். மினியாபோலிஸில், ஒரு வெள்ளை இன காவல் துறை அதிகாரியால் ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற கறுப்பின மனிதர் கொலை செய்யப்பட்டதிலிருந்து, அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிரான மனப் போக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Trending News