அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பியது ஹாலிவுட் செட்டில் படமாக்கியதா? உண்மை என்ன?

நிலவுக்கு மனிதர்களை அமெரிக்கா அனுப்பியது உண்மையா? பொய்யா? என்ற சந்தேகம் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது.   

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Aug 28, 2023, 04:21 PM IST
  • நிலவுக்கு அமெரிக்கா சென்றது உண்மையா பொய்யா என்பதை எல்லாம் நாம் சொல்லிவிடமுடியாது.
  • தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்த இந்த காலத்தில் நிலவுக்கு செல்வது சற்று சிக்கலாகத்தான் இருக்கிறது.
  • இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் சக்சஸ் ஆனதை அடுத்து, மனிதர்களை அனுப்ப ஆய்வு மேற்கொண்டு வருகிறது இஸ்ரோ.
அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பியது ஹாலிவுட் செட்டில் படமாக்கியதா? உண்மை என்ன? title=

தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்த இந்த காலத்தில் நிலவுக்கு செல்வது சற்று சிக்கலாகத்தான் இருக்கிறது. ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் வெடித்துச் சிதறியது. ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் கூட மோசமான வானிலை காரணமாக ஏவப்படாமல் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இப்படி வளர்ந்த நாடுகள் திணறும் நிலையில், 1969-ம் ஆண்டே அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பியது எப்படி என பல கேள்விகள் இப்போது எழுந்து வருகிறது. இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் சக்சஸ் ஆனதை அடுத்து, மனிதர்களை அனுப்ப ஆய்வு மேற்கொண்டு வருகிறது இஸ்ரோ. இப்படி இருக்க அமெரிக்காவுக்கு மட்டும் எப்படி நிலவுப்பயணம் சாத்தியமானது. அப்படி சாத்தியமானதென்றால் ஏன் அதன் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பவில்லை என இப்போது பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். 

அமெரிக்கா 1969-ம் ஆண்டு அப்போலோ 11 எனும் விண்வெளி விமானம் மூலம் மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போதும் இருக்கிறது. இதற்கு நடுவே அந்த புகைப்படங்களை பதிவிட்டு, இது எல்லாம் ஹாலிவுட் ஸ்டூடியோவில் செட் போட்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என பலரும் விமர்சித்து வருகின்றனர். அதோடு நிலவுக்கு பின்னால் இருக்கும் நட்சத்திரங்கள் ஏன் தெரியவில்லை என்றும், ஈர்ப்பு சக்தியே இல்லாத நிலவில் அமெரிக்க கொடி எப்படி பறந்தது என்றும் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் பெண் ரோபோ ‘வயோமித்ரா’!​

இதற்கு அமெரிக்க விஞ்ஞானிகள் பலர் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகின்றனர். நிலவில் புவி ஈர்ப்பு இல்லாதது போல ஒரு ஸ்டுடியோவில் செட் போடுவது சாத்தியமில்லை. சுத்தமாக காற்றே இல்லாத நிலவில் இருக்கும் சூழலை பூமியில் உருவாக்குவது சுலபம் இல்லை. அப்படி உருவாக்க வேண்டும் என்றால் அந்த ஸ்டுடியோவில் இருக்கும் மொத்த காற்றையும் வெளியேற்று அங்கு வெற்றிடத்தை உருவாக்க வேண்டும் என்கிறார் அமெரிக்க திரைப்படம் மற்றும் புகைப்பட தொழில்நுட்பங்களின் நிபுணரான மார்க் ஷூபின்.

காற்றில்லாத நிலவில் கொடி அசைந்ததும், இனெர்டியா (inertia) என்ற விளைவு தான் என்று விஞ்ஞானிகள் விளக்குகின்றனர். அதோடு நிலவில் இருந்து திரும்பிய போது அங்கிருந்து சில கற்கள் கொண்டுவரப்பட்டன. இன்றும் அந்த கற்கள் சீல் செய்யப்பட்டு பத்திரமாக அமெரிக்காவால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவற்றை யாரும் இதுவரை தொட்டதில்லையாம். அதன்மேல் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்கா அதுகுறித்து விரிவான முடிவுகளை எல்லாம் வெளியிடவில்லை. 

இதனால் நிலவுக்கு அமெரிக்கா சென்றது உண்மையா பொய்யா என்பதை எல்லாம் நாம் சொல்லிவிடமுடியாது. பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டாலும், அதற்கு விஞ்ஞானிகளும் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் தொழில்நுட்ப வசதி அந்த அளவுக்கு இல்லாத காலத்திலேயே சாத்தியமான மனிதர்களின் நிலவுப்பயணம் இப்போது ஆராய்ச்சியில் இருப்பது தான் இந்த சந்தேகத்திற்கான காரணம்.

மேலும் படிக்க | மேலும் படிக்க | முக்கிய தரவுகளை அனுப்பும் ரோவர்... குறிக்கோள்கள் நிறைவேற்றப்படும்: ISRO தலைவர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News