நிலவில் நீல் ஆம்ஸ்டாங் இறங்கியது போலியா? இதோ உண்மைகள்!

சந்திரனில் நீல் ஆம்ஸ்டாங் இறங்கியது போலியானது என்றும், அவை பூமியில் படமாக்கப்பட்ட ஹாலிவுட் போன்ற சினிமா தயாரிப்பு என்றும் சிலர் பல நாட்களாக கூறி வருகின்றனர்.    

Written by - RK Spark | Last Updated : Jul 21, 2022, 10:20 AM IST
  • நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் தரை இறங்கி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
  • இது குறித்த பல கேள்விகள் அனைவரிடத்திலும் உள்ளது.
  • இது நாசாவின் பொய் செய்திகள் என்று கூறப்படுகிறது.
நிலவில் நீல் ஆம்ஸ்டாங் இறங்கியது போலியா? இதோ உண்மைகள்! title=

விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் நிலவில் தரையிறங்கி ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அது நடக்கவில்லை என்றும், இது அமெரிக்க அரசாங்கத்தால் செய்யப்பட்ட புரளி என்றும் இன்னும் சில கருத்துக்கள் நிலவி வருகிறது.  ஜூலை 20, 1969 அன்று அப்பல்லோ 11 மிஷன் இரண்டு மனிதர்களை நிலவில் தரையிறக்கியது. மைக்கேல் காலின்ஸ் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் சந்திர மாட்யூலை இயக்கினர், இது விண்கலத்தில் இருந்து பிரிந்து சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்கியது. அவர்களில் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றார்.  2012ம் ஆண்டு தனது 82வது வயதில் ஆம்ஸ்ட்ராங் காலமானார்.

மேலும் படிக்க | நீலத்திலிருந்து சிவப்பாக மாறிய பூமி; நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி புகைப்படம்

 

moon

இருப்பினும், சந்திரனில் இறங்கியது போலியானது என்றும், பூமியில் படமாக்கப்பட்ட ஹாலிவுட் போன்ற சினிமா தயாரிப்பு என்றும் ஒரு கூற்று உள்ளது.  இது குறித்து சில விளக்கங்களை அசோசியேட்டட் பிரஸ் சில விளக்கங்களையும் கொடுத்துள்ளது.  

1) கேள்வி: சந்திரனில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அமெரிக்கக் கொடி காற்றில் ஆடுவது போல் தெரிகிறது. நிலவில் காற்று இல்லாததால் அது சாத்தியமற்றது.

பதில்: முதலில் அமெரிக்கக் கொடியை இறக்குவதற்குப் பதிலாக, நாசா கொடியை விரித்து வைக்க முடிவு செய்ததாக நாசாவின் முன்னாள் தலைமை வரலாற்றாசிரியர் ரோஜர் லானியஸ் கூறினார். அறிக்கையின்படி, ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் கம்பியை தற்செயலாக சற்று வளைத்ததால், கொடி அசைவது போல் இருந்தது. மேலும், விண்வெளி வீரர்கள் கொடிக்கம்பத்தை தரையில் பதித்த பிறகு கீழே விழும் என்று கவலைப்பட்டனர், எனவே அவர்கள் விரைவாக புகைப்படங்களை எடுத்தனர் என்று விளக்கம் அளித்துள்ளார்.

2) கேள்வி: புகைப்படங்கள் பூமியில் எடுக்கப்பட்டதா அல்லது சந்திரனில் எடுக்கப்பட்டதா என்பதைக் வானியலாளர்கள் எளிதாக கண்டுபிடித்து விட முடியும் என்பதால், எந்த புகைப்படத்தில் நட்சத்திரங்கள் இடம் பெற வில்லை.  

பதில்: லண்டனில் உள்ள கிரீன்விச் ராயல் அப்சர்வேட்டரியைச் சேர்ந்த வானியலாளர் எமிலி டிராபெக்-மவுண்டர், விண்வெளி வீரர்களின் கேமராக்களில் உள்ள ஷட்டர் ஸ்பீட் அதிகமாக இருந்ததால் நட்சத்திரங்கல் அதில் பதிவாக வில்லை.   

மேலும் படிக்க | தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கொடுக்கும் மசோதாவை நிறைவேற்றியது அமெரிக்கா

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News