IndiGo flight: தில்லி - தோஹா இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் மரணம்!

Indigo Flight Emergency landing: டெல்லியின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தோஹாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், கராச்சியில் உள்ள ஜின்னா டெர்மினல் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 13, 2023, 05:51 PM IST
  • விமானத்தில் இருந்த நைஜீரிய பிரஜை ஒருவரின் உடல்நிலை மோசமடைந்தது.
  • இண்டிகோ விமானம் டெல்லியில் இருந்து கத்தாரில் உள்ள தோஹாவுக்கு புறப்பட்டது.
  • மருத்துவர்கள் பயணி இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
IndiGo flight: தில்லி - தோஹா இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் மரணம்!  title=

டெல்லியின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தோஹாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், கராச்சியில் உள்ள ஜின்னா டெர்மினல் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது.  இண்டிகோவின் 6E-1736 விமானம் டெல்லியில் இருந்து தோஹாவுக்குப் பறந்து கொண்டிருந்த போது, மருத்துவ அவசரநிலை காரணமாக, பாகிஸ்தானின் கராச்சி நோக்கி திருப்பி விடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, இண்டிகோவின் 6E-1736 விமானம் மருத்துவ அவசரநிலை காரணமாக திருப்பி விடப்பட்டுள்ளது. இருப்பினும், கராச்சியில் தரையிறங்கிய பின்னர், விமான நிலைய மருத்துவக் குழுவினர் சம்பந்தப்பட்ட பயணி இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

இண்டிகோ விமானம் டெல்லியில் இருந்து கத்தாரில் உள்ள தோஹாவுக்கு புறப்பட்டது, ஆனால் பயணி ஒருவரின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து விமானத்தின் மற்ற பயணிகளை இடமாற்றம் செய்ய தயாராகி வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இண்டிகோ நிறுவனம் தனது அறிக்கையில்,  ‘பயணிகளின் உடல்நிலை மோசமடைந்தது குறித்த செய்தியால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம், மேலும் அந்த நபரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்’ என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | 104 பயணிகளுடன் மாயமான ரயில்! 100 ஆண்டுகளாக தொடரும் தேடுதல் வேட்டை!

விமானத்தில் இருந்த நைஜீரிய பிரஜை ஒருவரின் உடல்நிலை மோசமடைந்து கராச்சியில் தரையிறங்கிய பின் அவர் உடல் நிலை பரிசோதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார் என்பது தெரியவந்தது. இண்டிகோ விமானம் (6E-1736) டெல்லியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10.05 மணிக்கு தோஹாவுக்கு நான்கு மணி நேர பயணமாக புறப்பட்டது. அது நள்ளிரவுக்குப் பிறகு (உள்ளூர் நேரம்) கராச்சியில் தரையிறங்கியது.

பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAA) மற்றும் இஸ்லாமாபாத் தேசிய சுகாதார நிறுவனம் (NIH) ஆகியவற்றின் மருத்துவர்கள் பயணி இறந்துவிட்டதாக அறிவித்தனர். பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (CAA) கூற்றுப்படி, மருத்துவ அவசரநிலை காரணமாக, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானி கராச்சி விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரால் அவசரமாக தரையிறங்க அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | 55 பயணிகளை ‘விட்டு’ சென்ற Go First விமானம்! ரூ.10 லட்சம் அபராதம் விதித்த DGCA

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News