விமானங்கள் காணாமல் போன சம்பவங்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். விமானம் அமெரிக்காவில் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் எங்கோ காணாமல் போனது. அதன்பிறகு இன்று வரை அந்த விமானம் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் நிலை என்ன என கண்டுபிடிக்கப்படவில்லை. இத்தாலியில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.இதுவும் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம். ஆனால் இந்த முறை விமானம் இல்லை, ரயில் ஒன்று காணாமல் போன சம்பவத்தை அறிந்து கொள்ளலாம். இந்த ரயிலில் சுமார் 104 பயணிகள் இருந்தனர். இந்த ரயிலுடன் அனைத்து பயணிகளும் மாயமாகினர். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இது இன்று வரை அந்த ரயிலையோ, அதில் பயணித்தவர்கள் குறித்த எந்த துப்பும் கிடைக்கவில்லை.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்
1911 ஆம் ஆண்டில், இத்தாலியின் ஜெனெட்டி ரயில்வே நிறுவனம் புதிய ரயிலை உருவாக்கியது. ரயில் பெட்டிகளில் இருந்து இன்ஜின் வரை அனைத்தும் புத்தம் புதியதாக இருந்தது. சோதனையாக அதில் இலவசமாக பயணிக்குமாறு நிறுவனம் மக்களை அழைத்தது. இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் உட்பட சுமார் 104 பேர் ரயிலில் ஏறினர். ரயில் சிறிது தூரம் வேகமாக சென்றது... ஆனால் ஒரு சுரங்கப்பாதை வந்து அந்த சுரங்கப்பாதைக்குள் ரயில் நுழைந்தவுடன்... உள்ளே நுழைந்தவுடன் எங்கோ மறைந்து விட்டது. ரயிலை வரவேற்க, அடுத்து வரும் ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருந்தனர், ஆனால் இந்த ரயில் அங்கு வரவில்லை.
மேலும் படிக்க | அநாசமாய் சாலையைக் கடக்கும் அனகோண்டா பாம்பு! போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த பாம்பு
இரண்டு பயணிகள் குதித்ததாக தகவல்
ரயில் சுரங்கப்பாதையில் நுழைந்தபோது, அந்த நேரத்தில் இரண்டு பயணிகள் ரயிலில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து, பயணி மீட்புக் குழுவினரை சந்தித்தபோது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பயணிகளில் ஒருவர் என்ன நடந்தது என்பது குறித்து எதுவும் பேச மறுத்துவிட்டார். ரயில் சுரங்கப்பாதையில் சென்றவுடன் திடீரென காணாமல் போனதாகவும், ரயிலில் இருந்து அவர் எப்படி வெளியே வந்தார் என்றும் தனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.
இந்த ரயில் வேறொரு உலகத்திற்குப் போய்விட்டதா?
இந்த ரயில் காலப்பயணம் செய்து அங்கிருந்து மறைந்து வேறு உலகத்தை அடைந்ததாக இந்த ரயில் குறித்து உலகம் முழுவதும் வதந்தி பரவி வருகிறது. இருப்பினும், இது வரை விஞ்ஞானிகளால் காணாமல் போன ரயில் பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ரயிலின் சில பகுதிகள் ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பல முறை கூறப்பட்டது. இருப்பினும், இதற்கு உறுதியான ஆதாரம் யாரிடமும் இல்லை.
மேலும் படிக்க | 6 மாதங்களுக்கு ஒரு முறை நாட்டை மாற்றும் தீவு! 364 ஆண்டு கால நடைமுறை!
மேலும் படிக்க | உடும்பை கடித்து குதறிய 10 அடி நீள கோப்ரா பாம்பு...வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ