மனித மூளைக்குள் மைக்ரோசிப்... எலான் மஸ்கின் நியூராலிங்க் ஆராய்ச்சிக்கு அனுமதி!

எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் முதல் முறையாக மனிதர்கள் மீதான மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி பெற்றுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 21, 2023, 01:23 PM IST
  • மூளையின் ஒரு பகுதியில் மைக்ரோ சிப்பை அறுவை சிகிச்சை மூலம் வைக்க ஒரு ரோபோவைப் பயன்படுத்துவார்கள்.
  • மூளை-கணினி இடைமுகத்தை மனிதர்களுக்குள் முதன்முதலில் பொருத்தியது நியூராலிங்க் நிறுவனம் அல்ல.
  • அமெரிக்காவை தளமாகக் கொண்ட சின்க்ரான் ஒரு எண்டோவாஸ்குலர் மூளை-கணினி இன்டர்ஃபேஸ் (BCI) நிறுவனமாகும்.
மனித மூளைக்குள் மைக்ரோசிப்... எலான் மஸ்கின் நியூராலிங்க் ஆராய்ச்சிக்கு அனுமதி! title=

வாஷிங்டன்: எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் மருத்துவ பரிசோதனைகளுக்கு அனுமதி பெற்றுள்ளது. நியூராலிங்க் மனித மூளையில் மைக்ரோ சி பொருத்தி சோதனை செய்வதற்காக நோயாளிகளைச் அனுமதிக்க தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளது. மைக்ரோ சிப் சாதனத்தை மூளையில் பொருத்தி மருத்துவ பரிசோதனைகளை நடத்த நியூராலிங்கிற்கு சுயாதீன அமைப்பு ஒன்று அனுமதி வழங்கியுள்ளது. நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனம் செவ்வாயன்று, முடக்குவாத நோயாளிகளை மையமாகக் கொண்ட ஆறு வருட ஆய்வில் மூளையில் சிப் பொருத்தி பரிசோதிப்பதற்காக நோயாளிகளை ஆட்சேர்ப்பு செய்யத் தொடங்க ஒப்புதல் பெற்றதாக அறிவித்தது.

X தளத்தில் தகவலை பகிர்ந்து கொண்ட எலோன் மஸ்க்

எலோன் மஸ்க் X தளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். முதல் மனித நோயாளி விரைவில் நியூராலிங்க் கருவியைப் பெறுவார் என்று அவர் பதிவிட்டுள்ளார். முழு உடல் இயக்கத்தை மீட்டெடுக்கும் திறன் கொண்டது மைக்ரோ சிப் என கூறினார். மஸ்க் இரண்டு படிகள் மேலே சென்று ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு இந்த சிகிச்சை கிடைத்து இருந்தால் கற்பனை செய்து பாருங்கள் என்று கூறினார்.

மூளை-கணினி இடைமுகத்தை உருவாக்கியுள்ள நியூராலிங்க் 

மூளை சமிக்ஞைகளை சேகரித்து பகுப்பாய்வு செய்யக்கூடிய மூளை-கணினி இடைமுகங்களை (Brain- Computer Interfaces - BCIs) உருவாக்கும் பல நிறுவனங்களில் நியூராலிங்க் (Neuralink) ஒன்றாகும். நியூராலிங்க் உரிமையாளர் எலோன் மஸ்க் தனது நிறுவனத்தை மிக விரிவாக விளம்பரப்படுத்தியுள்ளார். தனது சாதனத்தின் மூலம் மனிதர்கள் செயற்கை நுண்ணறிவுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் இது மூளை கணினியை உருவாக்கும் என்றும் அவர் கூறினார். பல வல்லுநர்கள் மஸ்கின் இந்த கூற்றுகள் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதிலுமிருந்து நரம்பியல் விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் நியூராலிங்கின் இந்த மனித சோதனை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

மைக்ரோ சிப்பின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன்

மூளையில் மைக்ரோ சிப் பொருத்துவதற்கான மருத்துவ பரிசோதனையில், முடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களை தவிர கழுத்து காயம் அல்லது அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லரோசிஸ் (ALS) காரணமாக முடங்கிப் போயிருக்கும் நோயாளிகளும் சேர்க்கப்படலாம். மக்கள் தங்கள் எண்ணங்களுடன் கணினி கர்சர் அல்லது கீபோர்டைக் கட்டுப்படுத்த உதவுவதில், மைக்ரோ சிப்பின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை ஆய்வு சோதிக்கும். இதைச் செய்ய, ஆராய்ச்சியாளர்கள் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதியில் மைக்ரோ சிப்பை அறுவை சிகிச்சை மூலம் வைக்க ஒரு ரோபோவைப் பயன்படுத்துவார்கள். இந்த சாதனம் நோயாளிகளின் எண்ணங்களை மட்டுமே பயன்படுத்தி கணினி கர்சர் அல்லது கீபோர்டைக் கட்டுப்படுத்த உதவும். ஒரு அறிக்கையின்படி, இந்த ஆய்வு தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டை மதிப்பீடு செய்யும்.

மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்திற்கு 10 லட்சம் பேரை அனுப்ப திட்டமிடும் எலோன் மஸ்க்!

மனித மருத்துவ பரிசோதனைக்கு FDA அனுமதி

முன்னதாக, மே மாதத்தில், நிறுவனம் தனது முதல் - மனித மருத்துவ பரிசோதனைக்கு FDA அனுமதியைப் பெற்றதாக அறிவித்தது. ஆராய்ச்சியில், குரங்குகளின் மூளையில் பொருத்தப்பட்ட சிப்கள் சிறப்பாக வேலை செய்துள்ளன. சில குரங்குகள் கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தியும் இருக்கின்றன. இது தொடர்பான ஆய்வறிக்கைகளை நியூராலிங்க் நிறுவனம், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்து, அடுத்தக்கட்டமாக மனித உடலில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொண்டது. எனினும், BCI சாதனம் மனிதர்களின் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டாலும் கூட, அதை வணிகரீதியாக விற்பனை செய்வதற்கான ஒப்புதலைப் பெறுவதற்கு இன்னும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நியூராலிங் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான சின்க்ரான்

இருப்பினும், மூளை-கணினி இடைமுகத்தை மனிதர்களுக்குள் முதன்முதலில் பொருத்தியது நியூராலிங்க் நிறுவனம் அல்ல என்பது கூடுதல் தகவலாகும். சின்க்ரான் ( Synchron), கடந்த ஆண்டு மே மாதம் வெறும் எண்ணங்களைப் பயன்படுத்தி, டிஜிட்டல் சாதனங்களை ஹேண்ட்ஸ் ஃப்ரீயாகக் கட்டுப்படுத்த, அமெரிக்காவில் கடுமையாக முடங்கிப்போயிருந்த ஆறு நோயாளிகளுக்கு மனித சோதனைகளைத் தொடங்கியது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட சின்க்ரான் ஒரு எண்டோவாஸ்குலர் மூளை-கணினி இன்டர்ஃபேஸ் (BCI) நிறுவனமாகும். இது நியூராலிங் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான இது, முடங்கியவர்கள் தங்கள் மூளை செயல்பாடுகளின் மூலம் கணினிகள் மற்றும் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | உளவு பார்க்கும் WhatsApp... அதை நம்பாதீங்க.. பகீர் கிளப்பும் எலான் மஸ்க்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News