Sorry for the trouble : பெண் ஊழியர்களை பாலியல் சீண்டல் செய்து துன்புறுத்திய ஜப்பானின் ஜினான் நகரத்தின் மேயர் ஹிடியோ கோஜிமா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் மீதான புகார்களில் எவ்வளவு உண்மை தெரியுமா? மொத்தம் 99 புகார்கள் உண்மையானவை என்று மூன்றாம் தரப்பு விசாரணைக் குழு அடையாளம் கண்டுள்ளது. பெண் பணியாளர்களில் தலைகள் அல்லது பிட்டங்களைத் தொடுவது, பாவாடைகளைத் தூக்கும்படி கட்டாயப்படுத்துவது உட்பட பல அசிங்கங்களை செய்த மேயர் தற்போது தலை குனிந்து நிற்கிறார்.
ஜப்பானிய நகரமான ஜினானின் மேயர் ஹிடியோ கோஜிமா, மூன்றாம் தரப்புக் குழுவின் விசாரணை அறிக்கைக்குப் பிறகு பிப்ரவரி 29ம் நாளன்று ராஜினாமா செய்தார்.
கேவலமான நடத்தை
ஜப்பான் மேயர் மீதான விசாரணையை மேற்கொண்டிர்நுத மூன்றாம் தரப்புக் குழு, கோஜிமாவுக்கு எதிரான பல்வேறு பாலியல் துன்புறுத்தல் புகார்கள் குறித்த தனது அறிக்கையை பிப்ரவரி 27 செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் பெண்கள் தங்கள் மார்புகளையும், கால் அழகையும் மேயருக்கு காட்ட கட்டாயப்படுத்தியது உட்பட 99 துன்புறுத்தல் செயல்களை குழு அடையாளம் கண்டுள்ளது. நகர மேயர் போன்ற உயர் பதவியில் இருக்கும் ஒருவர் செய்யத்தகாத செயல்கள் என, அந்தக் குழு தெரிவித்துள்ளது. மேலும் அவரது பாலியல் கருத்துகள் மற்றும் நடத்தை பற்றியும் அறிக்கை குறிப்பிடுகிறது. அவரது செயல்களில் சில, அநாகரீகமான தாக்குதல் என்ற சட்ட வரையறைக்குள் அடங்கும்.
கோஜிமாவின் கீழ் பணிபுரியும் 193 ஊழியர்களில் 161 பேரிடம் (80 ஆண்கள் மற்றும் 81 பெண்கள்) மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
58 சதவீத பெண்களும் 53.7 சதவீத ஆண்களும் மேயர் தங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். 85 சதவீத ஆண்களும் 81.4 சதவீத பெண்களும் அவர் ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது மற்றும் திட்டுவதையும் பார்த்ததாகக் கூறியுள்ளனர்.
இதுபோன்ற மிகவும் மோசமான குற்றச்சாட்டுக்கு ஆளான 74 வயதான கோஜிமா, 2020 நவம்பரில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். விசாரணைக் குழுவின் அறிக்கையை மறுத்த அவர், அறிக்கை ஒருதலைபட்சமானது என்று கூறுகிறார். விசாரணை அறிக்கை ஆரம்பத்திலிருந்தே பாலியல் துன்புறுத்தலை மனதில் கொண்டு செய்யப்பட்டது என்று நினைக்கிறேன். அது சரியில்லை" என்று கோஜிமா கூறினார்.
பெண் ஊழியர்களின் தலையைத் தட்டுவது உண்மையில் பாலியல் துன்புறுத்தல் செயல் என்பதை அவர் ஒப்புக் கொண்டாலும், பெண் ஊழியர்களைக் கட்டிப்பிடிப்பது போன்ற சில குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். இறுதியில், கண்ணீருடன் மன்னிப்புக் கேட்ட அவர், "என்னால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன், நான் ராஜினாமா செய்கிறேன்" என்று கூறினார்.
நான் விலக வேண்டிய நேரம் இது என்று கூறி அவர் பதவியை ராஜினாமா செய்தாலும் அவரது ராஜினாமா இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இன்று கூடவிருக்கும் நகர சபையின் ஒப்புதலுக்குப் பிறகே, பதவி விலகல் இறுதி செய்யப்படும். இறுதி செய்யப்பட்டால், மேயர் தேர்தல் ஏப்ரல் இறுதிக்குள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | உடலுறவில் இத்தனை பிரச்னைகளா... விந்தணு முதல் ஆணுறை வரை அலர்ஜி - மனம் திறந்த பெண்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ