பாகிஸ்தான் தின வாழ்த்துக்களை தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) எழுதிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவித்து கடிதம் பதில் கடிதம் ள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) தனது கடிதத்தில் " இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான, நல்லுறவு வேண்டும் என பாகிஸ்தான் மக்களும் விரும்புகிறார்கள். தெற்காசியாவில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் (Jammu & Kashmir) பிரச்சனையை தீர்க்கும் நாங்கள் நம்புகிறோம் " என குறிப்பிட்டுள்ளார்.
ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் -19 (COVID-19) தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்கள் வெற்றி பெற வேண்டும் என பிரதமர் இம்ரான் கான் வாழ்த்தியுள்ளார்.
பாகிஸ்தான் தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க பிரதமர் மோடி, இம்ரான் கானுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
"அண்டை நாடாக, இந்தியா எப்போதுமே, பாகிஸ்தான் மக்களுடன் நல்லுறவையே விரும்புகிறது. இதற்காக, பயங்கரவாதமும் விரோதமும் இல்லாத நம்பிக்கையான ஒரு சூழல் கஏற்படுவது அவசியம்" என்றும் அவர் கூறினார்.
இது ஒவ்வொரு ஆண்டும் அனுப்பப்படும் வழக்கமான கடிதம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் சவால்களை கையாள்வதில் வெற்றி பெற பிரதமர் இம்ரான் கான் மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கு மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு சாதகமான நிலை ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளன.
கடந்த மாதம், இந்திய மற்றும் பாகிஸ்தான் படைகள் ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில், 2003 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்தன.
அண்மையில், சிந்து நதி ஆணையத்தின் கூட்டத்திற்காக பாகிஸ்தான் அதிகாரிகளின் தூதுக்குழு இந்தியா வந்து சேர்ந்தது. இரண்டரை ஆண்டுகளில் இதுபோன்று நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.
ALSO READ | வாங்கின $100 கோடி கடனை உடனே திருப்பி கொடுங்க என்கிறது UAE; பீதியில் பாகிஸ்தான்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR