உலகின் 3 ‘பலே’ திருடர்கள்! வியக்க வைக்கும் ‘Money Heist’ கொள்ளை சம்பவங்கள்..!

உலகின் ‘பலே’ திருடர்கள் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த ‘Money Heist’ போன்ற கொள்ளை சம்பவங்கள் நடந்து 31 ஆண்டுகள் ஆன பிறகும், அமெரிக்க புலனாய்வு அமைப்பிற்கு திருடர்கள் பற்றிய எந்த வித துப்பும் கிடைக்கவில்லை. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 21, 2021, 04:46 PM IST
  • உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள திருடர்கள்.
  • கோடிக்கணக்கான டாலர்களை திருடியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
  • நகைக் கடையில் $108 மில்லியன் திருடப்பட்டது.
உலகின் 3 ‘பலே’ திருடர்கள்! வியக்க வைக்கும் ‘Money Heist’ கொள்ளை சம்பவங்கள்..! title=

வாஷிங்டன்: காவல் துறையின் கண்ணில் மண்ணை தூவி வரும்  இந்த ‘பலே’ திருடர்களை நினைத்து உலகமே வியக்கிறது எனலாம். உலகெங்கிலும் உள்ள நாடுகளின் ஏஜென்சிகளால்  கூட இன்று வரை அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த செய்தியில், உலகின் மூன்று ‘ஸ்மார்ட்டான’ திருடர்களைப் பற்றியும், அவர்களின்  ‘Money Heist’ போன்ற கொள்ளை சம்பவங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

உலகின் நம்பர்-3  பலே திருடன்

டிபி கூப்பர் (DB Cooper) உலகின் மூன்றாவது புத்திசாலி திருடன். நவம்பர் 24, 1971 அன்று போயிங்-707 விமானத்தை டிபி கூப்பர் கடத்தினார். டிபி கூப்பர் வெடிகுண்டை ஏற்றிக்கொண்டு விமானத்தில் ஏறினார். முதலில் விமானப் பணிப்பெண்ணிடம் வெடிகுண்டு இருப்பதாகச் சொன்னார். இதையடுத்து விமானத்தின் பைலட்டுக்கு அனுப்பிய குறிப்பில் 4 பாராசூட் மற்றும் 2 லட்சம் டாலர் கொடுங்கள் இல்லையெனில் வெடிகுண்டு வைத்து விமானத்தை தகர்ப்பேன் என்று எழுதப்பட்டிருந்தது. அமெரிக்காவின் சியாட்டிலில் விமானத்தை தரையிறக்க செய்து, தனக்கு இது வேண்டும், அது வேண்டும் என பட்டியலிட்டார். சியாட்டிலில் தனது கோரிக்கைள் நிறைவேற்றப்பட்டதற்கு ஈடாக, டிபி கூப்பர் 36 பயணிகளை விமானத்தில் விடுவித்தார். இதைத் தொடர்ந்து விமானம் மெக்சிகோவிற்கு பறந்தது. அப்போது டிபி கூப்பர் விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் குதித்து தப்பினார். இன்றுவரை அவர் பிடிபடவில்லை. அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

ALSO READ | Tesla காரை வெடி வைத்து தகர்த்த உரிமையாளர்.. காரணம் என்ன தெரியுமா..!!!

உலகின் நம்பர்-2  பலே திருடன்

அமெரிக்காவில் பாஸ்டனில் உள்ள கார்ட்னர் அருங்காட்சியகத்தில் திருடிய இரண்டு திருடர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளனர். 1990 ஆம் ஆண்டு கார்ட்னர் அருங்காட்சியகத்திற்கு இரண்டு திருடர்கள் போலீஸ்காரர்களாக  அடையாளப்படுத்திக் கொண்டு வந்தனர். காவலாளியிடம் தான் சோதனை செய்ய வந்ததாக கூறினர். பின்னர், காவலாளியை கட்டி வைத்துவிட்டு, பலகோடி ரூபாய் மதிப்புள்ள 13 கலைப் படைப்புகளுடன் திருடர்கள் இருவரும் தப்பினர். 31 ஆண்டுகளாகியும், திருடர்கள் குறித்த துப்பும் கிடைக்கவில்லை. திருடப்பட்ட கலைப்படைப்புகளும் கிடைக்கவில்லை. அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ தொடர்ந்து விசாரணை விசாரித்து வருகிறது. திருடர்கள் குறித்த தகவல் கொடுப்பவருக்கு, 10 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 75 கோடியே 61 லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் அருங்காட்சியகம் அறிவித்துள்ளது.

ALSO READ | கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை: மகனின் ‘₹3000 கோடியை’ குப்பையில் வீசிய தாய்..!!

உலகின் நம்பர்-1  பலே திருடன்

பலே  திருடர்களின் முடிசூடா மன்னன் மற்றும் நம்பர் 1  இடத்தில் இருப்பது ஹாரி வின்ஸ்டன் கொள்ளையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். டிசம்பர் 2008 இல், பிரான்சின் பாரிஸில் உள்ள நகைக் கடையில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் புகுந்தனர். அப்போது ஒரு பெண் துப்பாக்கியையும், மற்றொரு பெண் தன் பையில் இருந்த கைக்குண்டையும் காட்டி பயமுறுத்தியுள்ளார். இவர்கள் நகைக்கடையில் இருந்து 108 மில்லியன் டாலர்களை திருடிச் சென்றுள்ளனர். ஆனால் இன்று வரை இந்த நான்கு பேரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

ALSO READ | Viral Video: பயங்கர தீயிலிருந்து தப்பி ‘வல்லவன் வாழ்வான்’ என நிரூபித்த ‘வீர’ சிறுவர்கள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News