பாகிஸ்தானில் பாதுகாப்பு கருவிகள் பற்றாக்குறை: அரசு மருத்துவர்கள் ராஜினாமா

பாகிஸ்தானில், கொரோனாவிலிருந்து பாதுகாக்க கருவிகள் இல்லாததால், அரசு மருத்துவமனையின் 48 மருத்துவர்கள் ராஜினாமா செய்தனர்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 6, 2020, 02:23 PM IST
  • பாகிஸ்தானில் மருத்துவர்களுக்கு வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்காக, போதுமான பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படவில்லை
  • 5,000 க்கும் மேற்பட்ட சுகாதார வல்லுநர்கள் COVID-19 என்னும் கொடிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • பாகிஸ்தானில் 2,28,000 க்கும் மேற்பட்டவர்கள், COVID-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்
பாகிஸ்தானில் பாதுகாப்பு கருவிகள் பற்றாக்குறை: அரசு மருத்துவர்கள் ராஜினாமா title=

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க பாதுகாப்பு கருவிகளின் பற்றாக்குறை நிலவுவதால், பாகிஸ்தானில் (Pakistan) உள்ள மருத்துவர்கள் ராஜினாமா செய்கின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் உள்ள 48 மருத்துவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர் என பஞ்சாப் சுகாதார துறை கூறியுள்ளது. அவர்களின் ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் (Corona virus) தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாக்காக, போதுமான பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படவில்லை என்ற காரணம் காட்டி பாகிஸ்தானில் (Pakistan) உள்ள பஞ்சாப் மாகாணத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 48 மருத்துவர்கள் ராஜினாமா செய்ததால், கோவிட் -19 க்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் பின்னடைவை சந்தித்ததுள்ளது. பாகிதானில் இது வரை கொரோனாவினால், 4700 பேர் இறந்து விட்டனர்.

ALSO READ | குவைத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா: 8 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பும் அபாயம்

கொடிய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை  பாதுகாத்துக் கொள்ள,  பாதுகாப்பு கருவிகளை வழங்குமாறு அரசிடம்  பலமுறை கோரிய போதிலும், அரசு தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் இல்லை  என்பதால் மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்று லாகூர் பொது மருத்துவமனையின் மூத்த மருத்துவர் PTI இடம் தெரிவித்தார்.

மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு முசாஃபராபாத்தில் (பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்) மருத்துவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது என்று கூறிய அவர்,  மருத்துவர்கள் செய்த ஒரே பாவம் பாதுகாப்பு மருத்துவ கருவிகள் மற்றும் சம்பளங்கள் கிடைக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்தது தான் என அவர் புலம்பினார்.

ALSO READ | இந்தியா-பூட்டான் கோலோங்சு நீர் மின் திட்டம் ஒரு அலசல்...

முசாஃபராபாத்தில் 23 இளம் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இளம் மருத்துவர்கள் சங்கம் PoK பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர வார்டுகளை மூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் அரசு கவனம் செலுத்தாவிட்டால் அதிகமான மருத்துவர்கள் வேலையை விட்டு விலகும் ஆபத்து உள்ளதாக மூத்த மருத்துவர் எச்சரித்தார்.  எனினும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு கருவிகளை அரசு வழங்கி வருவதாக பஞ்சாப் சுகாதார அமைச்சர் டாக்டர் யாஸ்மின் ரஷீத் கூறினார்.

70 க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கொரோனா தொற்றினால் இறந்துவிட்டனர். அவர்களில் பெரும்பாலோர் மருத்துவர்கள் ஆவர்.

பாகிஸ்தானில் இதுவரை 3,000 மருத்துவர்கள் மற்றும் 600 செவிலியர்கள் உட்பட 5,000 க்கும் மேற்பட்ட சுகாதார வல்லுநர்கள் COVID-19 என்னும் கொடிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை வரை, 228,000 க்கும் மேற்பட்டவர்கள், COVID-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 4,700 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாவும் பதிவாகியுள்ளன.

Trending News