உங்களிடம் இருக்கும் 10 லட்சம் ரூபாய் பணம் 1 ரூபாயாக மாறினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? இன்று வெனிசுலாவில் வாழும் மக்களின் நிலையும் அது தான். நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் அரசாங்கம், தனது நாணயத்தை மாற்றுவதாக அறிவித்துள்ளது. உள்ளூர் நாணயமான 10 லட்சம் பொலிவரை (Bolivar) ஒரு பொலிவருக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.
அக்டோபர் 1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள்
கட்டுப்பாடற்ற பணவீக்கத்துடன் போராடும் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அக்டோபர் 1 முதல் புதிய நாணய மாற்றங்கள் நடைமுறைக்கு வரப் போகின்றன. இதன் கீழ், தற்போது 10 லட்சம் பொலிவாரின் மதிப்பு 1 பொலிவார் மட்டுமே இருக்கும். எனவே வெனிசுலா டிஜிட்டல் நாணயம் 'ரிசர்வ்' அடிப்படையில் கிரிப்டோகரன்சி புரட்சி மூலம் நிலைமையை இயல்பாக்க முயற்சிக்கிறது. இந்த டிஜிட்டல் நாணயம் மார்ச் 2020 முதல் புழக்கத்தில் உள்ளது.
100 பொலிவார் அதிக பட்ச மதிப்புடைய நோட்டாக இருக்கும்
10 லட்சம் பொலிவர் நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் நாணய மாற்ற நடவடிக்கை, அரசின் மற்றொரு பரிசோதனை முயற்சியாக இருக்கும். தகவல் தொடர்பு அமைச்சர் ஃப்ரெடி நானெஸ் ட்விட்டரில் இது குறித்து குறிப்பிடுகையில், "நாட்டின் மத்திய வங்கி 5, 10, 20, 50 மற்றும் 100 பொலிவர் புதிய நோட்டுகளை வெளியிடும். புதிய அமைப்பில், 100 பொலிவர் ரோட்டு, அதிக மதிப்பு கொண்ட நோட்டாக இருக்கும், அதன் மதிப்பு தற்போதைய 10 கோடி பொலிவருக்கு சமமாக இருக்கும்.
6 ஆண்டுகளாக தொடரும் மந்த நிலை
வெனிசுலாவில் தொடர்ந்து, ஆறாவது ஆண்டாக மந்த நிலை நீடிக்கிறது. உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து விண்ணை முட்டும் வகையில் அதிகரித்துள்ளதன் காரணமாக, மக்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டு, வறுமையில் சிக்கித் தவிக்கின்றனர். அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வால், உணவு விலைகள் விண்ணை தொட்டுள்ளன, மில்லியன் கணக்கான மக்கள் ஏழைகளாகிவிட்டனர்.
பூஜ்ஜிய குறைப்பு சோதனை
கடந்த தசாப்தத்தில், இரண்டு ஒத்த மாற்றங்கள் செய்யப்பட்டன, ஆனால் இது வெனிசுலாவின் பொருளாதார நிலைமையை மாற்ற சிறிதும் உதவவில்லை. இந்த முறையும் நோட்டுகள் மாற்றம் குறித்து மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளதற்கு இதுவே காரணம். 2008 ஆம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி ஹ்யூகோ சாவேஸ் பொலிவாரிலிருந்து மூன்று பூஜ்ஜியங்களை கொண்ட நோட்டுகளை அகற்ற முடிவு செய்தார். அவரது வாரிசான நிக்கோலஸ் மதுரோ ஐந்து பூஜ்ஜியம் கொண்ட நோட்டுகளை 2018 ஆம் ஆண்டில் நீக்கினார்.
5 லிட்டர் தண்ணீரின் விலை 74 லட்சம் பொலிவர்
அரசாங்கத்தின் இந்த முடிவினை அடுத்து, சந்தையில் 10 லட்சம் பொலிவார் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. அதே நேரத்தில், அதிகரித்து வரும் பணவீக்கத்தின் காரணமாக, 5 லிட்டர் பாட்டில் தண்ணீரை வாங்க 74 லட்சம் பொலிவார் தேவை, இது $ 1.84 என்ற மதிப்பிற்கு சமம். வெனிசுலாவின் சீரழிந்து போயுள்ள பொருளாதார நிலையில் இருந்து நம்மால் தெளிவாக அறிந்து கொள்ள இயலும்
ALSO READ | காயமடைந்தாரா கிம்? வட கொரிய அதிபர் தலையில் கட்டு, காரணம் என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR