பலரும் உடல் பருமன் குறித்து மிகவும் கவலையடைந்திருப்பீர்கள். உடல் பருமனை குறைக்க உணவு கட்டுப்பாட்டு, உடற்பயிற்சி என பலவற்றையும் நீங்கள் முயற்சித்திருப்பீர்கள். ஆனால், அவை எதுவும் உங்களுக்கு கைக்கொடுத்திருக்காது. எனவே, நீங்கள் மீண்டும் சோர்வடைந்து, உடல்நலத்தை பேண தவறிவிடுவீர்கள்.
அதேபோன்றுதான் அயர்லாந்தை சேர்ந்த ஒருவருக்கும் உடல் பருமனை குறைப்பதில் மோசமான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால், கடும் பின்னடைவுகளுக்கு பின்னரும் துவண்டு விடாமல் அவர் எடுத்த மாற்று முயற்சி அவரின் உடல் எடையை குறைப்பதில் எவ்வாறு பலனளித்தது என்று அவரே கூறியுள்ளார்.
மேலும், அந்த மாற்று முயற்சிகளை அணுஅணுவாக அவர் வீடியோ எடுத்து ஆவணப்படுத்தியுள்ளார். அதனை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பின்னர், அவரின் அந்த பதிவு இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க மதிய உணவில் இந்த 3 பொருட்களை சாப்பிடுங்க
அயர்லாந்தை சேர்ந்த பிரையன் ஓ'கீஃப் என்பவர் உடல் பருமன் காரணமாக பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளார். ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனால், உடல் பருமனை குறைப்பதற்கு தனது வீட்டை விட்டு, குடும்பத்தினரை விட்டு கண்காணாத இடத்திற்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.
தொடர்ந்து, அவர் ஸ்பெயினின் மல்லோர்கா நகருக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு சென்றுபின், குடும்பம், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் என அவருக்கு தெரிந்த அனைவரிடத்தில் இருந்தும் தகவல் தொடர்பை துண்டித்துள்ளார். அவர் எங்கு சென்றுடிருக்கிறார், எதற்கு சென்றுள்ளார், எப்படி இருக்கிறார் என அப்போது யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.
ஏறத்தாழ 7 மாத காலம் தனிமையில் இருந்துவந்த பிரையன், சமீபத்தில் மீண்டும் அவரது குடும்பத்தினரையும், நண்பர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அவரை பார்த்த குடும்பத்தினருக்கு அவர் யார் என்று தெரியாத அளவிற்கு அடையாளம் தெரியாமல் உருமாறியுள்ளார். அதாவது, அந்த 7 மாதங்களில் மட்டும் சுமார் 63 கிலோ உடல் எடையை குறைத்துள்ளதாக அவர் கூறுகிறார்.
பிரையன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :
மேலும், ஸ்பெயினுக்கு பயணப்பட்டதில் இருந்து, அவர் மேற்கொண்ட உடற்பயிற்சிகள், சைக்கிளிங் பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் இன்ஸ்டா வீடியோவில் இணைத்துள்ளார். அதில் அவர்,"பல ஆண்டுகளாக உடல் எடையை குறைக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், எதுவும் சரியாக அமையவில்லை. எனவே, வீட்டை விட்டு வெளியேற முடிவு எடுத்தேன்.
ஸ்பெயினில் உள்ள நகரத்திற்கு சென்று வேலைக்கு சேர்ந்தேன். தொடர்ந்து உடற்சி பயிற்சிகள் மேற்கொண்டாலும், எனது மனநிலையை சீராக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தேன். கடுமையான ஒழுக்கத்தை கடைப்பிடித்தேன். தற்போது 63 கிலோ உடல் எடையை 7 மாதங்களில் இழந்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஒரு புத்தக்கத்தில் குறிப்பிட்டிருந்தது எனவும் அதை வாசித்த பின்னர்தான் குடும்பத்தை விட்டு வெளியேறும் முடிவை எடுத்ததாகவும் பிரையன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,"நம்மில் பெரும்பாலானோரைப் போல எனக்கும் குடும்பம், நண்பர்கள் என்று வந்துவிட்டால் ஒரு பலவீனம் வந்து தொற்றிக்கொள்கிறது.
நண்பர்கள் மது அருந்துவதற்கு வெளியே செல்லும்போது அல்லது குடும்பத்தினர் இரவு உணவிற்கு வெளியே செல்லும்போது, நானும் அவர்களுடன் செல்வதையே விரும்புவேன். அதனால், உடல் பருமனை குறைக்கு குடும்பத்தை, சுற்றத்தை விட்டு வெளியேற முடிவு செய்தேன். நான் என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைத்து அவர்களிடம் தொடர்பில் இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு அங்கு வேலைக்கு சென்றுவிட்டேன்.
7 மாதங்களில், நான் ஒரு நாளும் ஓய்வு எடுத்ததில்லை. மனதிலும், உடலிலும் வலியை வைத்து பயிற்சியைத் தொடர்ந்தேன். ஒவ்வொரு நாளும், நான் கூடுதலாக பயிற்சி செய்ய முயற்சித்தேன். முதல் இரண்டு வாரங்களில், ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் நடைப் பயிற்சி மேற்கொண்டேன். பின்னர் வாரத்தில் ஆறு நாட்கள் பளு தூக்குதல், வாரத்திற்கு மூன்று முறை நீச்சல், வாரத்திற்கு மூன்று முறை ஓட்டம் என பழகிக்கொண்டேன். நான் எடை இயந்திரத்தில் கவனத்தை செலுத்தாமல், மன நிம்மதியில் கவனம் செலுத்தினேன். பலன் கிடைத்துவிட்டது" என பதிவிட்டுள்ளார்.
கடந்த செப். 11ஆம் தேதி இதனை அவர் பதவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதனை லைக் செய்துள்ளனர்.
உடல் எடையை குறைத்தது மட்டுமில்லாமல், பலருக்கும் ஊக்கமளிக்கும் விதமாக செயல்பட்டுள்ளார். தொடர் பயிற்சிகள், மன மகிழ்ச்சி மட்டுமே உடல் எடையை குறைக்க உதவும் என் பெரும் பாடத்தையும் அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அதிகமாக டிவி பார்த்த மகன்... விடிய விடிய பெற்றோர் கொடுத்த கொடூர தண்டனை...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ