உலகின் உயரமான கட்டடம்.. புர்ஜ் கலிஃபாவின் உச்சிக்கு செல்ல முடியுமா?

Burj Khalifa Bizarre News: மக்கள் புர்ஜ் கலிஃபாவின் மேல் தளத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை, இதற்கு பின்னால் இருக்கும் காரணங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 19, 2023, 02:14 PM IST
  • புர்ஜ் கலிஃபாவின் உயரம் 828 மீட்டர் ஆகும்.
  • இமயமலையை விட 56 மீட்டர் மட்டுமே இது குறைவு.
  • மக்கள் டிக்கெட் எடுத்து புர்ஜ் கலிஃபாவை பார்த்துக்கொள்ளலாம்.
உலகின் உயரமான கட்டடம்.. புர்ஜ் கலிஃபாவின் உச்சிக்கு செல்ல முடியுமா? title=

Burj Khalifa Bizarre News: புர்ஜ் கலிஃபா (Burj Khalifa) கட்டடத்தை குறித்த பல வீடியோக்களையும், செய்திகளையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். உலகின் மிக உயரமான கட்டடம் என்பதை தாண்டி, அதில் பல்வேறு திரைப்படங்களின் விளம்பரங்களை ஒளிபரப்பி, அந்த வீடியோக்களும் அதிக வைரலாகியுள்ளது. கட்டடத்தின் மீது ஒரு படத்தின் டிரைலர் அல்லது அந்த நடிகரின் புகைப்படங்களை காட்டப்படும் வீடியோக்களை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். உங்களின் சிலருக்கு அந்த உச்சத்தில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்ற ஆவல் கூட இருக்கலாம். அந்த வகையில், புர்ஜ் கலிஃபா கட்டடத்தின் உச்சி குறித்த தகவல் ஒன்றை இங்கே காணலாம். 

துபாயில் கட்டப்பட்ட புர்ஜ் கலிஃபா கட்டடம் உலகின் மிக உயரமான கட்டடம் என்பதை நீங்கள் நிச்சயம் தெரிந்திருப்பீர்கள். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் துபாய்க்கு வந்து இந்த கட்டிடத்தை பார்வையிடுகின்றனர். குறிப்பாக, கட்டடத்தின் முன் புகைப்படம் எடுக்கவும் அவர்கள் வருகிறார்கள் எனலாம். இந்த கட்டடத்திற்கு டிக்கெட் வாங்குவதன் மூலமும் மக்கள் செல்லலாம். இருப்பினும், டிக்கெட் வாங்கினாலும், மக்கள் புர்ஜ் கலிஃபாவின் மேல் தளத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பதை மிகச் சிலரே அறிவார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இதற்குப் பின்னால் என்ன காரணம் இருக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?  அதை தான் இங்கு விரிவாக காண்போம். 

மேலும் படிக்க | கனடா தூதர் வெளியேற ஆணை! பதிலடி கொடுக்கும் இந்தியா! விரிசலைடையும் உறவுகள்

முதலில், புர்ஜ் கலிஃபாவின் அம்சங்களைப் பற்றி பார்க்கலா். உலகின் மிக உயரமான கட்டடம் என்றழைக்கப்படும் இந்த கட்டடத்தின் உயரம் 828 மீட்டர் ஆகும். அதாவது, எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விட 56 மீட்டர் மட்டுமே குறைவு. இந்த கட்டிடம் தலைகீழ் பார்த்தால் 'Y' வடிவத்தில் இருக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அது கூடுதல் வலிமையைப் பெறுகிறது மற்றும் தரையில் அதன் பிடி வலுவாக உள்ளது. இந்த வடிவமைப்பு காரணமாக, பலத்த காற்றில் இருந்து கூட தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் வெற்றி பெறுகிறது.

நிலநடுக்கத்தையும் தாங்கக் கூடியது

புர்ஜ் கலிஃபாவில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. லிப்ட் தவிர, மேலே ஏறுவதற்கு கான்கிரீட் படிக்கட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தை எதிர்கொள்ள இந்த கட்டடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கட்டடம் ரிக்டர் அளவுகோலில் 7.0 அளவு நிலநடுக்கத்தை தாங்கும் திறன் கொண்டது. சிறந்த இணைப்பிற்காக, புர்ஜ் கலிஃபா அதன் சுற்றியுள்ள கட்டடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது, இதனால் வணிகமும் வளர முடியும்.

புர்ஜ் கலிஃபா கட்டடத்தின் மேல் தளத்திற்கு ஏன் மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பதை இப்போது பார்க்கலாம். உண்மையில், கார்ப்பரேட் அலுவலகங்கள், பணியிடங்கள் மற்றும் நிறுவனங்களின் பிற கூட்ட அரங்குகள் அங்கு உள்ளன. அங்கு அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் மட்டுமே வர அனுமதிக்கப்படுகிறார்கள். உலகப் புகழ்பெற்ற பிரபலங்கள் புர்ஜ் கலிஃபாவின் மேல் தளத்தில் இருந்து சிறப்பு அனுமதியுடன் போட்டோஷூட் எடுப்பதை அடிக்கடி பார்த்திருந்தாலும், அத்தகைய அனுமதி சில சந்தர்ப்பங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது, அனைவருக்கும் அல்ல.

மேலும் படிக்க | ரசாயன பயன்பாடு பெண்களுக்கு மட்டுமே ஏன் கேன்சரை அதிகரிக்கிறது? அதிர்ச்சி தரும் ஆய்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News