ஸ்டாக்ஹோம்: தான்சானிய நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னா 2021 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளதாக நோபல் விருது வழங்கும் அமைப்பு வியாழக்கிழமை (அக்டோபர் 7) தெரிவித்துள்ளது.
குர்னாவின் நாவல்களில் "பாரடைஸ்" மற்றும் "டெசெர்ஷன்" ஆகியவை அடங்கும். ஆங்கிலத்தில் எழுதும் இவர் பிரிட்டனில் வசிக்கிறார். இந்த பரிசு ஸ்வீடிஷ் அகாடமியால் வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு 10 மில்லியன் ஸ்வீடிஷ் கிரவுன்கள் ($ 1.14 மில்லியன்) ஆகும்.
ஸ்வீடனை சேர்ந்த டைனமைட் கண்டுபிடிப்பாளரும் பணக்கார தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபலின் விருப்பத்தின் பேரில் இந்த பரிசு உருவாக்கப்பட்டது. அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய பிரிவுகளில் செய்யப்பட்ட சாதனைகளுக்காக இந்த பரிசு வழங்கப்படுகின்றது.
BREAKING NEWS:
The 2021 #NobelPrize in Literature is awarded to the novelist Abdulrazak Gurnah “for his uncompromising and compassionate penetration of the effects of colonialism and the fate of the refugee in the gulf between cultures and continents.” pic.twitter.com/zw2LBQSJ4j— The Nobel Prize (@NobelPrize) October 7, 2021
1901 முதல் இந்த பரிசுகள் வழங்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த பட்டியலில் பொருளாதாரமும் சேர்க்கப்பட்டது.
ALSO READ: 2021 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
இலக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த விருதை பெரும்பாலும் நாவலாசிரியர்களே பெற்றுள்ளார்கள். எர்னஸ்ட் ஹெமிங்வே, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மற்றும் டோனி மோரிசன் போன்ற நாவலாசிரியர்கள், பாப்லோ நெருடா, ஜோசப் ப்ராட்ஸ்கி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற கவிஞர்கள், ஹரோல்ட் பிண்டர் மற்றும் யூஜின் ஓ நீல் போன்ற நாடக ஆசிரியர்கள் இதற்கு முன் இந்த விருதைப் பெற்ற சில பிரபலங்கள் ஆவர்.
எனினும், குறுகிய புனைகதை, வரலாறு, கட்டுரைகள், சுயசரிதை மற்றும் பத்திரிகை ஆகியவற்றை உள்ளடக்கிய படைப்புகளுக்காக எழுத்தாளர்களும் இந்த வென்றுள்ளனர். வின்ஸ்டன் சர்ச்சில் தனது நினைவுக் குறிப்புகளுக்காகவும், பெர்ட்ராண்ட் ரஸல் தனது தத்துவத்திற்காகவும், பாப் டிலான் தனது பாடல்களுக்காகவும் இந்த பரிசை வென்றார்கள். கடந்த ஆண்டுக்கான விருதை அமெரிக்க கவிஞர் லூயிஸ் க்ளக் வென்றார்.
பரிசுத் தொகை மற்றும் கவுரவத்தையும் தாண்டி, இந்த நோபல் பரிசை வெல்பவர்கள் அதிகமாக பிரபலமாகிறார்கள். பலரது கவனத்தை ஈர்க்கிறார்கள். இந்த விருது பெரும்பாலும் வெற்றியாளர்களின் புத்தக விற்பனையை ஊக்குவிக்கிறது மற்றும் அவர்களை ஒரு பரந்த சர்வதேச பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
ALSO READ: 2021 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR