வடகொரியாவின் மேம்பட்ட அணுகுண்டு செயல்திறன் சோதனை

அணுகுண்டுகளின் செயல்திறனை மேம்படுத்தும் நவீன ஆயுதத்தின் சோதனையை மேற்கொண்டது வடகொரியா

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 17, 2022, 05:39 PM IST
  • வடகொரியாவின் மேம்பட்ட அணுகுண்டு செயல்திறன் சோதனை
  • புதிய சோதனையை மேற்பார்வையிட்டார் கிம் ஜாங் உன்
  • உலக நாடுகளை அச்சுறுத்தும் வடகொரியா
வடகொரியாவின் மேம்பட்ட அணுகுண்டு செயல்திறன் சோதனை title=

சர்வதேச நாடுகளுடன் மோதல் போக்கைக் கொண்டிருக்கும் வடகொரியாவின் ஆயுத தொழில்நுட்பங்களும், அணு ஆயுத பலமும் உலக நாடுகளின் கவலைகளை அதிகரிக்கிறது.

இந்த நிலையில்ம் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், நாட்டின் "தந்திரோபாய அணுகுண்டுகளின் செயல்பாட்டில் செயல்திறனை" மேம்படுத்தும் ஒரு புதிய வகையான வழிகாட்டுதல் ஆயுதத்தின் சோதனையை மேற்பார்வையிட்டார் என்று கொரிய மத்திய செய்தி முகமை (KCNA) செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக வட கொரியா புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) அமைப்பை பரிசோதித்துள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியிருந்தது. அதோடு, 2020 இல் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்ட "மான்ஸ்டர்" ஏவுகணையையும் வடகொரியா பரிசோதித்திருப்பதாக அமெரிக்கா கூறிவந்த நிலையில் தற்போது இந்த தகவல் வெளிவந்து உலகின் கவலைகளை அதிகரித்துள்ளது.  

மேலும் படிக்க | உக்ரைன் யுத்தத்திற்கு அமெரிக்காவே அடிப்படை காரணம்! வடகொரியா குற்றச்சாட்டு

அமெரிக்க அதிகாரிகள் மற்றும் நாட்டின் அண்டை நாடான தென் கொரியாவின் கூற்றுப்படி, வட கொரியா விரைவில் அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கும் என்பதையே இந்த அறிவிப்பு குறிக்கிறது.  

சோதனையை நடத்தி முடித்த பின்னர், "நாட்டின் பாதுகாப்பு திறன்கள் மற்றும் அணுசக்தி போர் படைகளை மேலும் கட்டியெழுப்புவதற்கு" குறிப்பிடத்தக்க வழிகாட்டுதல்களை கிம் வழங்கினார் என்று KCNA  கூறுகிறது.  

WORLD

சனிக்கிழமை (ஏப்ரல் 16, 2022) பிற்பகுதியில் வட கொரியாவின் கிழக்கு கடற்கரையிலிருந்து கடலை நோக்கி ஏவப்பட்ட இரண்டு எறிகணைகளை கண்டறிந்ததாக இன்று (2022, ஏப்ரல் 17) தென் கொரியா இராணுவம், அறிவித்தது. எறிகணைகள் சுமார் 110 கிலோமீட்டர்கள் (68 மைல்கள்) 25 கிலோமீட்டர் பறந்தன.

"புதிய வகை தந்திரோபாய வழிகாட்டுதல் ஆயுத அமைப்பு ... முன்னணி நீண்ட தூர பீரங்கி அலகுகளின் துப்பாக்கிச் சக்தியை கடுமையாக மேம்படுத்துவதிலும், க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளின் செயல்பாட்டின் செயல்திறனை மேம்படுத்துவதிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்று KCNA தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகள்! 

எனினும், சோதனை நடத்தப்பட்ட இடம் அல்லது ஏவுகணைகள் பற்றிய விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோவ்மென்ட் நிறுவனத்தின் மூத்த உறுப்பினரான அங்கிட் பாண்டா இது ஒரு குறுகிய தூர ஏவுகணை மற்றும் நாட்டின் முதல் தந்திரோபாய அணு ஆயுத விநியோக அமைப்பாக இருக்கலாம் என்று ஊகிக்கிறார்.

அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்றதிலிருந்து இதுவரை, வட கொரியா 13 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது, கடந்த மாதம் அமெரிக்காவின் கிழக்குப் பகுதிக்கு அணுகுண்டுகளை அனுப்பும் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது. இது, புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பை உள்ளடக்கியது" என்று அமெரிக்காவும் தென் கொரியாவும் மதிப்பிட்டுள்ளன. 

இந்த சோதனை, உளவு செயற்கைக்கோளுக்கானது என வடகொரியா கூறியது. தற்போதைய தலைவர் கிம் ஜாங் உன்னின் தாத்தாவும், தேசத்தின் நிறுவனர் கிம் இல் சுங்கின் 110 வது ஆண்டு நிறைவு விழாவைத் தொடர்ந்து இந்த சோதனைகள் வந்துள்ளன.

மேலும் படிக்க | நிறைய சாப்பிட்டா நாட்டுக்கு நல்லதல்ல’ அதிபர் கிம்மின் உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News