வட கொரியாவில் (North Korea) சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு சமீபத்தில் வந்த ஒரு அறிக்கை சாட்சியாக அமைந்துள்ளது. இந்த அறிக்கையின்படி, சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்ட மக்களின் நிலைமை அங்கு மிகவும் பரிதாபகரமானதாக உள்ளது. வட கொரியாவில் மனித உரிமைகள் வெளிப்படையாக மீறப்படுகின்றன. சட்ட நடவடிக்கைகளின் கீழ், மக்கள் மிகச் சிறிய தவறுகளுக்கு கூட சிறையில் அடைக்கப்படுகிறார்கள், துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள், சித்திரவதை செய்யப்படுகிறார்கள். கைதிகளை சித்திரவதை செய்ய பலவிதமான கொடூரமான தண்டனைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த அறிக்கையின்படி, கைதிகள் சிறைவாசத்தில் இருக்கும்போது, சித்திரவதை, அவமானம் மற்றும் கட்டாய ஒப்புதல் வாக்குமூலம் போன்ற பலவிதமான கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். இங்குள்ள நிலைமை மிகவும் அச்சுறுத்துவதாக உள்ளது என்றும் கைதிகள் விலங்குகளுக்கு சமமாகக் கூட கருதப்படுவதில்லை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
இந்த அறிக்கையை அமெரிக்காவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வழங்கியது. முன்னாள் வட கொரிய கைதிகள் மற்றும் முன்னாள் அதிகாரிகளுடனான டஜன் கணக்கான நேர்காணல்களின் அடிப்படையில் இந்த வெளிப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன. காவலில் இருக்கும்போது, கைதிகள் எதிர்கொள்ளும் மனிதாபிமானமற்ற தண்டனைகளுக்கும் அட்டூழியங்களுக்கும் அளவே இல்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அணு ஆயுத சக்தி அதிகமாக இருக்கும் வட கொரியா, ஒரு 'வெளிப்படைத்தன்மை இல்லாத’ பொருளாதாரம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் குற்றவியல் நீதி அமைப்பு பற்றி மிகக் குறைந்த தகவல்கள் கிடைக்கின்றன. இதன் காரணமாகத்தான் வட கொரியாவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் மிக அதிகமாக உள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபையும் (United Nations) அதன் பிற உறுப்பு நாடுகளும் கருதுகின்றன.
சிறையில் குறுகிய காலத்திற்கு வைக்கப்பட்டவர்களை தடிகளால் அடிப்பதும், உதைப்பதும் சித்திரவதையின் ஆரம்ப கட்டங்களாகும் என பேட்டி கண்டவர்களில் பலர் தெரிவித்தனர். ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி, "விதிகளின்படி எந்தவொரு தாக்குதலும் இருக்கக்கூடாது. ஆனால் முதற்கட்ட விசாரணை மற்றும் ஆரம்ப கட்டங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நாங்கள் ஒப்புக்கொள்ள வைக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது" என்றார். அத்தகைய சூழ்நிலையில், ஒப்புதல் வாக்குமூலம் பெற அவர்களை அப்படி அடித்து உதைக்க வேண்டியுள்ளது என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.
பல நாட்கள் சுமார் 16 மணி நேரம் முழங்காலில் மண்டியிட்டு நிற்பதற்கும், ஒரு கால் மேல் மற்றொரு கால் போட்டு உட்காரவும் தாங்கள் வற்புறுத்தப்பட்டதாக முன்னர் சிறைவாசம் அனுபவித்த கைதிகள் பலர் தெரிவித்தனர். சிறிய தவறுகளுக்குக் கூட இங்கு பெரிய தண்டனைகள் வழங்கப்படுகின்றன. காரணமே இல்லாமல் பலர் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள்.
ALSO READ: நடுக்கடலில் விசாரணை, நொடிப்பொழுதில் தீர்ப்பு…வட கொரியாவும் அதன் நியாயங்களும்!!
முன்னாள் கைதிகள் பலர், கம்புகள், தடிகள், இரும்பு தடிகள், பெல்டுகள் ஆகியவற்றால் தாங்கள் பட்ட கணகில்லா அடிகளைப் பற்றி பரிதாபமாகக் கூறினர்.
‘ஒருமுறை எனக்கு ஓராயிரம் யார்டு அளவிலான மைதானத்தை பல முறை சுற்ற வேண்டும் என்ற தண்டனை வழங்கப்பட்டது” என்று ஒரு கைதி கூறினார். அவர் கூறியபோதே அந்த தண்டனையில் அவருக்கு ஏற்பட்ட வலியை அவர் முகத்தில் காண முடிந்து என்று அறிக்கை குறிப்பிட்டது.
வட கொரியாவில் அவ்வப்போது விதிகளும் சட்டங்களும் மாறிக்கொண்டே இருக்கும். தண்டனை அளிக்கும் நபரின் விருப்பம், கொடூரமான வகைகளில் அறங்கேற்றப்படும்.
அங்குள்ள சிறைகளில் பல மர்ம அறைகள் இருப்பதாகவும், அங்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் மீண்டும் திரும்பி வருவதில்லை என்றும் முன்னாள் கைதிகள் கூறுகிறார்கள். கற்பழிப்புகளும், அங்க துண்டிப்புகளும் அங்கு அவ்வப்போது நடக்கும் கொடூரங்கள். இவை வெளி உலகிற்கு அறியப்பட்ட சில தண்டனைகள்தான் என்றும், இன்னும் இவற்றை விட கொடுமையான, மனதை பதபதைக்க வைக்கும் பல தண்டனைகள் அங்கு சர்வ சாதாரணமாக நிறைவேற்றப்படுகின்றன என்றும் சர்வதெச மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
வட கொரியா வெளிப்படைத் தன்மை இல்லாத நாடாக இருப்பதால், அங்கு நடக்கும் பல அட்டூழியங்கள் யாருக்கும் தெரியாமல் போய் விடுகின்றன. குரல்கள் எழும்பினால் அவை அடக்கப்படுகின்றன. அப்படியும் கசியும் சில தகவல்களும் அந்த நாட்டால் முற்றிலுமாக மறுக்கப்படுகின்றன.
ALSO READ: வட கொரியாவா வினோத கொரியாவா: Kim Jong Un ஆட்சியின் latest order என்ன தெரியுமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR