இந்தியாவுடனான தூதரக, வர்த்தக உறவுகளை முறித்தது பாகிஸ்தான்!

இந்தியாவுடன் தூதரக ரீதியிலான உறவை தர மதிப்பீட்டளவில் குறைக்கவும், வர்த்தகத்தை நிறுத்தவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது!

Last Updated : Aug 7, 2019, 09:34 PM IST
இந்தியாவுடனான தூதரக, வர்த்தக உறவுகளை முறித்தது பாகிஸ்தான்! title=

இந்தியாவுடன் தூதரக ரீதியிலான உறவை தர மதிப்பீட்டளவில் குறைக்கவும், வர்த்தகத்தை நிறுத்தவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது!

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுதல் தொடர்பாக இந்திய அரசு நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தேசிய பாதுகாப்பு குழுவின் (NSC) இரண்டாவது அமர்வை இன்று கூட்டினர். இந்திய அரசாங்கத்தின் முடிவிற்குப் பிறகு பதிலளிக்கும் உத்தி குறித்து விவாதித்து முடிவெடுக்க, உயர்மட்ட சிவில்-இராணுவ அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். 

இன்று நடைப்பெற்ற இக்கூட்டத்தில், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்குப் பதிலடியாக இந்தியாவுடன் தூதரக ரீதியிலான உறவை தர மதிப்பீட்டளவில் குறைக்கவும், வர்த்தகத்தை நிறுத்தவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

“டெல்லியிலிருந்து தூதரை திரும்ப அழைக்கவும், தங்கள் நாட்டிலுள்ள இந்தியத் தூதரை திருப்பி அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசின் அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, தேசியப் பாதுகாப்புக் கமிட்டி இந்தியாவுடன் தூதரக ரீதியிலான உறவுகளை தரமதிப்பீட்டளவில் குறைக்கவும், வர்த்தக உறவுகளை முறிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இருதரப்பு ஏற்பாடுகளை மறு சீராய்வு செய்யவும் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.வுக்கு எடுத்துச் செல்லவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது, என குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் இந்தக் கமிட்டியில் பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ஆம் தேதியை ‘தைரிய காஷ்மீரிகளுடன் ஒற்றுமை பாராட்டும் நாள்’ என்று அனுசரிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது., ஆகஸ்ட் 15-ஆம் தேதி கறுப்பு நாளாக அனுசரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் “கொடூரமான இனவேறி, மனித உரிமை மீறல் இந்திய அரசை அம்பலப்படுத்த அனைத்து தூதரக வழிமுறைகளையும் முடுக்கி விடவும் பாகிஸ்தான் ராணுவம் முழு கண்காணிப்பில் இருக்கவும் பிரதமர் இம்ரான் கான் அறிவுறுத்தியுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News