ஐ.நா-வில் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம்: வாக்களிக்காமல் ஒதுங்கி நின்ற இந்தியா

Russia-Ukraine war: ரஷ்யாவும் சீனாவும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன, எந்த நாடுகளும் எதிராக வாக்களிக்கவில்லை. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 24, 2022, 07:15 AM IST
  • ஐ.நா-வில் ரஷ்ய தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு.
  • இந்தியா வாக்கெடுப்பிலிருந்து விலகி இருந்தது.
  • ரஷ்யா உக்ரைன் மக்களின் வாழ்வையும் கனவுகளையும் சிதைத்துள்ளது: அமெரிக்கா
ஐ.நா-வில் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம்: வாக்களிக்காமல் ஒதுங்கி நின்ற இந்தியா title=

ஐக்கிய நாடுகள் சபை: உக்ரைனில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பான ரஷ்யாவின் தீர்மானத்தில் 12 ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் சேர்ந்து இந்தியாவும் எந்த பக்கமும் சாராமல் புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. சிரியா, வட கொரியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் ரஷ்யாவின் வரைவு தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு அளித்தன. புதன் கிழமையன்று, ஐ.நா சபையில் நிறைவேற்றப்படுவதற்குத் தேவையான ஒன்பது வாக்குகளைப் பெறாததால், இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ரஷ்யாவும் சீனாவும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன, எந்த நாடுகளும் எதிராக வாக்களிக்கவில்லை. இந்தியா மற்றும் மீதமுள்ள பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் வாக்களிக்காமல் ஒதுங்கி நின்றனர். 

நிரந்தர மற்றும் வீட்டோ அதிகாரம் கொண்ட கவுன்சில் உறுப்பினர் நாடான ரஷ்யா, 15 நாடுகளைக் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தது. அதில் 'மனிதாபிமான பணியாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் உள்ள நபர்கள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும், பொதுமக்களை பாதுகாப்பான முறையில், விரைவாக, தடையின்றி வெளியேறுவதற்கு முறையான போர்நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும், இந்த முடிவுக்கு மனிதாபிமான இடைநிறுத்தங்களை சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒப்புக்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் வைகக்ப்பட்டன. 

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லாத ரஷ்ய தீர்மானம், உக்ரைனுக்கு வெளியே உள்ள இடங்களுக்கு வெளிநாட்டவர்கள் மற்றும் உக்ரைன் மக்கள், குறிப்பாக பெண்கள், குழந்தைகள், பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள் ஆகியோர் பாதுகாப்பாக, தடையின்றி வெளியேற்றப்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைகக் வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. 

தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்குப் பிறகு மற்ற கவுன்சில் உறுப்பினர்கள் அறிக்கைகள் வெளியிட்டாலும், இந்தியா எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இதற்கு முன்பு, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்பான தீர்மானங்களுக்கு பாதுகாப்பு கவுன்சிலில் இரண்டு முறையும், பொதுச் சபையில் ஒரு முறையும் இந்தியா வாக்களிக்கவில்லை.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் ட்வீட் செய்து, 'ஒருங்கிணைந்த எதிர்ப்பு வாக்கெடுப்பில், பாதுகாப்பு கவுன்சிலின் 13 உறுப்பினர்கள் ரஷ்யாவின் கேலிக்கூத்தான தீர்மானத்தில் இருந்து விலகி, உக்ரைனில் அது உருவாக்கிய மனிதாபிமான நெருக்கடியை சுட்டிக்காட்டினர்' என்று தெரிவித்துள்ளார். 

வாக்கெடுப்பு குறித்து விளக்கிய தாமஸ்-கிரீன்ஃபீல்ட், "ரஷ்யா மட்டும் உருவாக்கிய மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க சர்வதேச சமூகத்தைக் கேட்டு ஒரு தீர்மானத்தை முன்வைக்கும் துணிச்சலை ரஷ்யா கொண்டிருப்பது உண்மையில் மனசாட்சியற்றது" என்று கூறினார்.

"அமெரிக்கா இந்த உரையைத் தவிர்க்க விரும்புகிறது, ஏனென்றால், வெளிப்படையாகக் கூற வேண்டுமானால், ரஷ்யா மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமைகள் பற்றியோ அல்லது மில்லியன் கணக்கான உயிர்கள் மற்றும் கனவுகள் சிதைந்த போனதைப் பற்றியோ கவலைப்படவில்லை. அப்படி அவர்களுக்கு அக்கறை இருந்தால், போரை நிறுத்தி இருப்பார்கள்" 

"ரஷ்யா ஒரு ஆக்கிரமிப்பு செய்யும், தாக்குதல் நடத்தும் நாடு. உக்ரைன் மக்களுக்கு எதிரான மிருகத்தனமான பிரச்சாரத்தில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது, ஆனால், தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளாத ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து, அது நிறைவேற்றப்பட வேண்டும் என விரும்புகிறது" என்று அவர் கூறினார்.

இங்கிலாந்தின் தூதர் பார்பரா உட்வார்ட், பாதுகாப்பு கவுன்சிலிலோ அல்லது பொதுச் சபையிலோ, ரஷ்யாதான் இந்த மனிதாபிமான பேரழிவிற்கு ஒரே காரணம் என்பதை அங்கீகரிக்காத எந்தவொரு தீர்மானத்திற்கும் தனது நாடு வாக்களிக்காது என்று கூறினார். 

ஐ.நா பொதுச் சபை மற்றும் பாதுகாப்புச் சபையில் புதன்கிழமை முன்வைக்கப்பட்ட உக்ரைனின் மனிதாபிமான நிலைமை குறித்த மூன்று தீர்மானங்களில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் முன்வைக்கப்பட்ட ரஷ்ய தீர்மானமும் ஒன்றாகும்.

மேலும் படிக்க | Ukraine under Threat: உக்ரைனில் செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகே பரவியது காட்டுத் தீயா?

ஐ.நா பொதுச் சபை புதன்கிழமை அன்று உக்ரைன் குறித்த அதன் 11வது அவசரகால சிறப்பு அமர்வை மீண்டும் தொடங்கியது. அதற்கு முன் பரிசீலனைக்கு இரண்டு தீர்மானங்கள் இருந்தன. வியாழன் அன்று 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபை தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"உக்ரேனுக்கு எதிரான ஆக்கிரமிப்பின் மனிதாபிமான விளைவுகள்" பற்றிய உக்ரைன் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளின் ஒரு UNGA தீர்மானம், உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் விரோதப் போக்கை,  குறிப்பாக பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோருகிறது. . மனிதாபிமான பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் உள்ள நபர்கள் உட்பட பொதுமக்கள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அது குறிப்பிடுகிறது." 

உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளில் தேவைப்படுபவர்களுக்கு மனிதாபிமானப் பணியாளர்களின் உதவி, அவர்களின் போக்குவரத்து வழிமுறைகள், பொருட்கள் மற்றும் உபகரணங்களை கிடைக்கச்செய்வது, பாதுகாப்பான மற்றும் தடையில்லா அணுகல் ஆகியவற்றை அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அது கோருகிறது.

தென்னாப்பிரிக்காவால் முன்மொழியப்பட்ட மற்ற போட்டித் தீர்மானத்தில் ரஷ்யா பற்றிய குறிப்பே இல்லை. மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் பகைமையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அரசியல் உரையாடல், பேச்சுவார்த்தைகள், மத்தியஸ்தம் மற்றும் நீடித்த அமைதியை அடைவதை நோக்கமாகக் கொண்ட பிற அமைதி வழிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் இந்த தீர்மானத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | அணு ஆயுதத்தை பயன்படுத்த விரும்பவில்லை... ஆனால்... எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News