Russia Ukraine War:கடைசி மூச்சு வரை எதிர்கொள்வோம்; உக்ரைன் திட்டவட்டம்

கருங்கடலில் ரஷ்யாவின் முக்கியமான போர்க்கப்பல் ஒன்று அழிக்கப்பட்டதை அடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 18, 2022, 09:57 AM IST
  • மரியுபோலில் சரணடைய உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
  • தனது கடைசி மூச்சு வரை தனது நகரத்தை காப்பாற்ற முயற்சிப்பேன் என்று பிரதமர் கூறுகிறார்.
  • சரணடைந்தால் உயிர் பிழைக்கலாம் என ரஷ்யா தெளிவாக எச்சரித்துள்ளது.
Russia Ukraine War:கடைசி மூச்சு வரை எதிர்கொள்வோம்; உக்ரைன் திட்டவட்டம் title=

கருங்கடலில் ரஷ்யாவின் முக்கியமான போர்க்கப்பல் ஒன்று அழிக்கப்பட்டதை அடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்ய இராணுவம் உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் முழுவதையும் கைப்பற்ற முயற்சிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய இராணுவம் தெற்கு உக்ரைனில் உள்ள மிகப் பெரிய எஃகு ஆலையை அழித்தது. மரியுபோலில் உக்ரைன் துருப்புக்களை சரணடையுமாறு ரஷ்யா கேட்டுக் கொண்ட நிலையில் உக்ரைன் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கடைசி மூச்சு வரைபோராடுவோம்: உக்ரைன் பிரதமர்

உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிகல், தனது படைகள் மரியுபோலில் நின்று தங்கள் கடைசி மூச்சு வரை ரஷ்யாவை எதிர்கொள்வார்கள் என்று கூறுகிறார். அதே நேரத்தில், ரஷ்ய இராணுவம், மரியுபோலில் நிலைகொண்டுள்ள உக்ரைன் படைகளிடம், ஆயுதங்களை கீழே போட்டால், உயிர் தப்பிக்கலாம் என்று கூறியது. உக்ரைன் வீரர்கள் சரணடைந்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறியது.

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்; ஜெலென்ஸ்கி கூறுவது என்ன

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கொனாஷென்கோவ் கூறுகையில், எதிர்ப்பு காட்டுபவர்கள் கொல்லப்படுவது உறுதி என எச்சரித்தார். இதற்கு பதிலளித்த உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிகல், இந்தப் போரில் வெற்றி பெற இறுதிவரை போராடுவோம். இராஜதந்திரத்தின் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் தயாராக உள்ளது. ஆனால் நாங்கள் சரணடைய விரும்பவில்லை. மறுபுறம், உக்ரைனின் துணை பாதுகாப்பு மந்திரி ஹன்னா மல்யார், மரியுபோல் உக்ரைனைப் பாதுகாக்கும் கேடயம் என்று கூறினார். மரியுபோல் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியபோது உக்ரைன் ராணுவம் அங்கு  தொடர்ந்து போராடி வருவதாக் அவர் கூறினார்.

மாரியுபோலை விரைவில் கைப்பற்ற ரஷ்யா விரும்புகிறது. ஏனெனில் இதன் மூலம் கிரிமியாவிற்கான ஒரு நில நடைபாதை ரஷ்யாவிற்கு கிடைக்கும். மரியுபோலில் உக்ரேனியப் படைகளைத் தோற்கடித்த பிறகு, அங்கு நிலைகொண்டுள்ள ரஷ்யப் படைகள் டான்பாஸ் நோக்கி நகர முடியும். ரஷ்யா 2014 ஆம் ஆண்டு கிரிமியாவை இணைத்தது. ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி 50 நாட்களுக்கும் மேலாகிவிட்டது., ஆனால் இதுவரை எந்த முடிவும் இல்லாமல் தொடர்கிறது.  இரு நாடுகளுக்கு இடையில் அமைதியை ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள், பேச்சுவார்த்தைகள் எதுவும் பலனளிக்கவில்லை.

மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News