கொலை செய்தவரின் இதயத்தை எடுத்து, அதை உருளைக்கிழங்குடன் சமைத்து, 2 பேருக்கு உணவாக கொடுத்த கொலையாளியின் குரூர புத்தி அனைவருக்கும் திகிலூட்டுகிறது.
மூன்று பேரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படும் நபர், அதில் ஒருவரின் இதயத்தை எடுத்து சமைத்து மற்ற இருவருக்கு உணவாக கொடுத்துள்ள சம்பவம் பத்திரிகைகளில் வெளியாகி திகில் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் (Oklahoma) மூன்று பேரை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர், முதலில் தனது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரை கொலை செய்தார். சடலத்தின் உடலில் இருந்து இதயத்தை வெளியே எடுத்து, அதை உருளைக்கிழங்குடன் சமைத்தார்.
Also Read | போலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை
அந்த உணவை, மற்ற இருவரையும் கொல்வதற்கு முன் பரிமாறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கொடூர கொலைகளை செய்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன் (Lawrence Paul Anderson) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்த பிறகு, அவருடைய உடலில் இருந்து இதயத்தை அகற்றியுள்ளார். அந்த இதயத்தை தனது மாமாவின் வீட்டிற்கு கொண்டு வந்த ஆண்டர்சன், உருளைக்கிழங்குடன் இதயத்தை சமைத்து தனது மாமா மற்றும் அவரது மனைவிக்கு பரிமாறியிருக்கிறார்.
அதன் பிறகு, தனது மாமா மற்றும் அவரது நான்கு வயது பேத்தியையும் ஆண்டர்சன் கொன்றதாக, சிக்காஷாவில் உள்ள கிரேடி கவுண்டி நீதிமன்றத்தில் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
Also Read | 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்ததற்கான காரணம் இதுவே!
"பேய்களை (demons) விடுவிப்பதற்காக தனது குடும்பத்திற்கு உருளைக்கிழங்குடன் இதயத்தை சமைத்து பரிமாறியிருக்கிறார்," என்று நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட வாரண்டில் (search warrant) குறிப்பிடப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் தான் ஆண்டர்சன் ஓக்லஹோமா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கொடூரமான குற்றத்தைச் செய்திருக்கும் ஆண்டர்சனுக்கு நீண்ட குற்றப் பின்னணி உள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் 2017 ல் ஆண்டர்சனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. செவ்வாயன்று நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், தன் மீதான கொலைக் குற்றச்சாட்டுகளை ஆண்டர்சன் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read | நயாகரா நீர்வீழ்ச்சி, வெண்பனி பனிவீழ்ச்சியாக மாறிய அதிசயம்!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR