Social Media: சமூக ஊடகங்கள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலா? ரெசெப் தையிப் எர்டோகன்

சுதந்திரத்தின் அடையாளமாக கருதப்பட்ட சமூக ஊடகங்கள், இன்றைய ஜனநாயகத்திற்கு முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக மாறியுள்ளன என்ற துருக்கி அதிபரின் கருத்தின் பின்னணி...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 13, 2021, 07:22 AM IST
  • சுதந்திரத்தின் அடையாளம் சமூக ஊடகங்கள்
  • சமூக ஊடகங்களால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலா?
  • துருக்கி அதிபரின் கருத்து
Social Media: சமூக ஊடகங்கள் ஜனநாயகத்திற்கு  அச்சுறுத்தலா? ரெசெப் தையிப் எர்டோகன் title=

சமூக ஊடகங்கள் "இன்றைய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்" என்று துருக்கியின் அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் கூறுகிறார்.  "சுதந்திரத்தின் அடையாளமாக கருதப்பட்ட சமூக ஊடகங்கள், இன்றைய ஜனநாயகத்திற்கு முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக மாறியுள்ளன" என்று அவர் தெரிவித்தார். 

இந்த ஆண்டின் தொடக்கத்தில், துருக்கியின் ஆளும் கட்சியான Justice and Development Party (AKP), தவறான செய்திகள் மற்றும் ஆன்லைன் தவறான தகவல்களை மறைப்பதற்கான வரைவு சட்டத்தை தயாரித்தது. பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் (Facebook, Twitter and YouTube) ஆகியவற்றுக்கு நெறிமுறைகளை அரசு புகுத்தியது.

கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தால், துருக்கியில் ஆயிரக்கணக்கான இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன என்ற செய்திகள் வெளியாகின. மேலும், சமூக ஊடக தளங்களை (Social Media) கண்காணிக்க சட்டப் பிரதிநிதியை நியமிப்பது மற்றும் தரவுகளை துருக்கியிலேயே சேமிக்க வேண்டும் என்றும் அந்நாடு சமூக ஊடகங்களை அறிவுறுத்தியது.

READ ALSO | தப்லிகி ஜமாத் மீது தடை - சவுதி அரேபியா

தங்கள் நாட்டின் மக்களை, குறிப்பாக சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரை, பொய்கள் மற்றும் தவறான தகவல்களுக்கு எதிராக பாதுகாக்கவும், துல்லியமான மற்றும் பாரபட்சமற்ற தகவல்களை மக்கள் பெறவேண்டும் என்ற உரிமையை மீறாமல் பாதுகாக்கவும் துருக்கி முயற்சிப்பதாக ரெசெப் தையப் எர்டோகன் தெரிவித்தார்.

எர்டோகனின் உடல்நிலை குறித்து பல்வேறு ஊகங்களுக்கு மத்தியில் #heisdead என்ற ஹேஷ்டேக் பிரபலமடைந்தது. இதையடுத்து, நாட்டின் சைபர் ஆணையம் விசாரணையைத் தொடங்கியது. வதந்திகளைத் தடுக்க துருக்கி அதிபர் எர்டோகனின் புகைப்படத்தையும் அந்நாட்டு அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், துருக்கியில் விக்கிப்பீடியா மூன்று வருடங்கள் முடக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.. கடந்த ஆண்டுதான் விக்கிப்பீடியாவின் மீதான தடையை நீக்கியது துருக்கி. பயங்கரவாத குழுக்களுடன், துருக்கிக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் கருத்துக்கள் இருந்ததால், "ஜனநாயகத்தின் சமூக ஒழுங்கின் தேவைகளுக்கு இணங்கவில்லை"  என்று கூறி 2017ஆம் ஆண்டில் அந்நாட்டு நீதிமன்றம் தளத்தை முடக்கியது.

Also Read | பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News