‘Trump-னாலும் கொரோனா கொரோனாதான், Mask-க போடுப்பா’: Video பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்னும் தொற்றிலிருந்து பூரணமாக குணமாகவில்லை என்பதும் அவருக்கு இந்த தொற்றுநோய்க்கான சிகிச்சை இன்னும் நடந்து கொண்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 6, 2020, 02:26 PM IST
  • புகைப்படங்களை எடுப்பதற்காக முகக்கவசத்தை கழற்றினார் டிரம்ப்.
  • அவர் இன்னும் தொற்றிலிருந்து பூரணமாக குணமாகவில்லை குறிப்பிடத்தக்கது.
  • அமெரிக்க அதிபர் டிரம்ப் மூச்சு வாங்குவதைக் காட்டும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
‘Trump-னாலும் கொரோனா கொரோனாதான், Mask-க போடுப்பா’: Video பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் title=

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று இருப்பது கண்டறியப்பட்டு விரிவான சிகிச்சைக்குப் பிறகு அவர் வெள்ளை மாளிகைக்கு (White House) திரும்பி விட்டார். அவர் திரும்பி வந்ததும், ட்ரம்ப் புகைப்படம் எடுக்க தனது முகக்கவசத்தை அகற்றினார்.

அவர் இன்னும் தொற்றிலிருந்து பூரணமாக குணமாகவில்லை என்பதும் அவருக்கு இந்த தொற்றுநோய்க்கான சிகிச்சை இன்னும் நடந்து கொண்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் அவர் முகக்கவசம் இல்லாமல் இருப்பது நல்ல விஷயம் அல்ல. அவரை மட்டுமல்லாமல் அவர் அருகில் உள்ள பிறரையும் இது ஆபத்துக்குள்ளாக்கும்.

ALSO READ: அமெரிக்க அதிபர் Donald Trump-க்கு அளிக்கப்பட்ட COVID Special Treatment என்ன தெரியுமா?

வால்டர் ரீட் மருத்துவ மையத்திலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) டிரம்ப் வெள்ளை மாளிகையில் படிக்கட்டுகளில் ஏறும்போது மூச்சுத்திணறுவதைக் காட்டும் வீடியோக்களும் படங்களும் வெளி வந்துள்ளன.

ALSO READ: 'Covid தொற்றுக்கு பயப்பட வேண்டாம்': சிக்கிசைக்கு பின் வெள்ளை மாளிகைக்கு திரும்பிய டிரம்ப்..!

”டிரம்ப் வெள்ளை மாளிகையில் சில படிகள் ஏறுகிறார், தனது முகக்கவ்சத்தைக் கழற்றுகிறார், பின்னர் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதையும் அவர் மூச்சு விடுவதில் சிரமப்படுவதையும் காண முடிகிறது” என்று ஒரு சமூக ஊடக பயனர் எழுதியுள்ளார்.

புகைப்படங்களை எடுப்பதற்காக முகக்கவசத்தை கழற்றி அதன் மூலம் தன் குடும்பத்தையும், அங்கு பணிபுரியும் மற்றவர்களையும் டிரம்ப் தொற்றுக்கான ஆபத்தில் சிக்க வைத்துள்ளார் என பலர் அவரை சாடி வருகின்றனர். அவர் மருத்துவமனையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று பலர் கருதுகிறார்கள்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மூச்சு வாங்குவதைக் காட்டும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. ‘Gasping’ அதாவது மூச்சுத்திணறல் என்ற வார்த்தை ட்விட்டரில் trend ஆகி வருகிறது. அதிபர் டிரம்ப் மக்களை நம்ப வைக்க என்ன வேண்டுமானாலும் கூறலாம், ஆனால், அவர் காட்டிக்கொள்வதை விட அவரது நிலைமை மோசமாக உள்ளது என்றே பலர் கருதுகிறார்கள்.

டிரம்பின் மூச்சுத்திணறல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் அளித்த சில பதில் ட்வீட்டுகள் இதோ:

Trending News