அமெரிக்காவின் அலபா மாகாணத்தின் அரசு பள்ளிகளில் 28 ஆண்டுகளாக தொடர்ந்த யோகாவுக்கான தடை நீங்கியது. இந்தத் தடையை நீக்க முயற்சி எடுத்தவர் ஜெர்மி கிரே (Jeremy Gray) என்ற நாடாளுமன்ற உறுப்பினர். அதற்காக அவர் அலபாமா மாகாணத்தில் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.
யோகா மீதான தடையை நீக்கக் கோரி அலபாமா மாகாணத்தில் அவர் கோரிக்கையை முன்வைத்தபோது, மக்கள் அவருக்கு ஆதரவாக சேரத் தொடங்கினர், இப்போது, மாகாண ஆளுநர் Kay Ivey தடையை ரத்து செய்துள்ளார்.
புதிய விதிமுறைகளின்படி, யோகாவை இனிமேல் அரசுப் பள்ளிகளில் கற்பிக்கலாம்; பயிற்சி செய்யலாம். ஆனால், மந்திரங்கள் மற்றும் முத்திரைகளை பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை.
Also Read | சற்றே வேகம் தணியும் கொரோனா; கடந்த 24 மணி நேரத்தில் 2,57,299 பேருக்கு கொரோனா
"யோகாவின் பயிற்சிகள், போஸ் மற்றும் உடலை வளைத்து பயிற்சி செய்யும் நுட்பங்களை மட்டுமே மாகாணத்தில் செய்யவேண்டும்" என்று சட்டம் கூறுகிறது. "மந்திர உச்சாடனங்கள், முத்திரைகள், ஹிப்னாடிக் நிலைகளின் தூண்டுதல், ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது. அதிலும் நமஸ்தே என வாழ்த்து சொல்வது வெளிப்படையாக தடைசெய்யப்படும்" என்று புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், யோகா பயிற்சி செய்யும் போது, அதன் அசல் சமஸ்கிருத பெயர்களைப் பயன்படுத்தக்கூடாது, போஸ்களை ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டும் "downward dog" மற்றும் "the warrior"போன்ற பெயர்களில் அழைக்கலாம், சமஸ்கிருதத்தில் உள்ள பெயர்களை பயன்படுத்தக்கூடாது.
முன்னதாக யோகா மீதான தடையை நீக்குவது தொடர்பாக மாகாண பிரதிநிதிகள் சபையில் கோரிக்கை எழுப்பப்பட்டது. அதற்குக் மார்ச் மாதத்தில் அனுமதியும் கிடைத்தது. தற்போது செனட்டில் விவாதம் நடைபெற்று வாக்களிப்பு நடைபெற்றது.
Also Read | போலிச் செய்திகளை பரப்புகிறது சீனா: குற்றம் சாட்டும் தைவான்
யோகா பயிற்சியை தொடர்ந்து செய்யும் குழந்தைகளை 'வேறு மதத்திற்கு மாற்றப்படலாம்' என்ற சந்தேகத்தில் இந்தத் தடை கடந்த 28 ஆண்டுகளாக நீடித்தது. பழமைவாதிகள் விதித்த தடை இது என்று ஜெர்மி கிரே (Jeremy Gray) கூறுகிறார்.
"யோகா என்பது இந்து மதத்தின் முக்கியமான பகுதியாகும், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இனிமேல், யோகா பயிற்றுவிப்பாளர்கள் மழலையர் பள்ளி முதல் அனைத்து நிலையிலும், பள்ளி மாணவர்களுக்கு யோகாவை கற்றுக் கொடுத்து அவர்களின் மனதை மாற்றலாம்" என்று பழமைவாத அலபாமா ஈகிள் அமைப்பின் இயக்குநர் பெக்கி கெரிட்சன் கருதுகிறார்.
Also Read | உடலை பொன்னிறமாக்கும் பொன்னாங்கண்ணி கண்களுக்கு ஒளியூட்டும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR