சீனாவின் பிரபல மொபைல் நிறுவனமான Xiaomi தனது அடுத்த வரவினை அறிமுகம் செய்துள்ளது!
ஜியோமி ஆனது தனது அடுத்த வரவான Redmi S2-னை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த Redmi S2 ஆனது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Redmi S2 ஆனது இரண்டு வேறுபாட்டுகளில் வருகிறது...
- 3GB RAM + 32GB நினைவக திறன் மற்றும்
- 4GB RAM + 64GB நினைவக திறன்
அதேப்போல் ரோஸ் கோல்ட், சாம்பெங் கோல்ட் மற்றும் பிளாட்டினம் சில்வர் என்னும் 3 வண்ணங்களில் வெளியாகவுள்ளது.
3GB RAM + 32GB நினைவக திறனடுன் வெளிவரும் மொபைல் ஆனது CNY999 என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் Rs 10,500.
4GB RAM + 64GB நினைவக திறனடுன் வெளிவரும் மொபைல் ஆனது CNY1,299 என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் Rs 13,500
Xiaomi Redmi S2 சிறப்பம்சம்சங்கள்...
- 5.99" HD தொடுதிரை
- ஆண்ட்ராய்ட் 8.1 செயல்திறன்.
- Snapdragon 625 SoC clocked பிராசஸர்,
- Adreno 506 GPU கிராப்பிக்ஸ் கார்ட்
- கைரேகை ஸ்கேனர்.
- 16MP முன் கேமிரா
- 12MP மற்றும் 5MP என இரண்டு பின் கேமிரா
- 256GB எக்ஸ்பேண்டபல் நினைவகம்.
- 3080mAh பேட்டரி திறன் என பல சிறப்பம்சங்களுடன் வெளிவரும் இந்த மொபைல் ஆனது அனைவரது கவனத்தினையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.