எம்.பி-க்கு எலி மருந்து அனுப்பி நூதன போராட்டம் #Cauvery Issue

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த மணி என்பவர் பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரனுக்கு எலி மருந்து அனுப்பி நூதன போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்!

Updated: Mar 31, 2018, 09:11 AM IST
எம்.பி-க்கு எலி மருந்து அனுப்பி நூதன போராட்டம் #Cauvery Issue
ZeeNewsTamil

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த மணி என்பவர் பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரனுக்கு எலி மருந்து அனுப்பி நூதன போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்! 

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் போட்டது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. 

அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது. காவிரி வாரியம் அமைக்க 6-வார கேடு முடிவடைந்ததை அடுத்து அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் கோவை இளைஞர் ஒருவர் நூதனமான போராட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளார். 

கோவை மாவட்டம் கிணத்துக்கடவையை சேர்ந்த பெரியார் மணி என்பவர் சமூக ஆர்வலர். காவிரி மேலாண்மை அமைக்கா விட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என நவநீதகிருஷ்ணன் எம்.பி நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்த நிலையில், காவிரி மேலாணமை வாரியம் அமைக்காததால் எம்.பி.மகேந்திரனுக்கு எலி மருந்து அனுப்பும் போராட்டத்தை மேற்கொண்டார். 

அவர் எலி மருந்துடன் தனது எதிர்ப்பு கருத்து அடங்கித்தை மேற்கொண்துள்ளார். 

அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளது....! 

வணக்கம், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுள் ஒருவராக நான் வைக்கும் கோரிக்கை, தங்கள் கட்சி சார்பாக 37 எம்.பி-கள் இருந்தும் தமிழக விவசாயிகளின் பல வருட பிரச்னைக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பை கூட நடைமுறைப்படுத்த முடியவில்லை. ராஜினாமா செய்யாமல் தற்கொலை செய்வோம் என்று தங்கள் கட்சி நவநீதகிருஷ்ணன் பேசியது வரவேற்கத்தக்கது. 37 பேரும் தற்கொலை செய்தாவது மக்கள் பிரச்னையை தீர்க்கவும். தங்களுக்கு உதவும் நோக்கில் எலி மருந்து அனுப்புகிறேன் நன்றி எனக் அந்த கடித்ததில் எழுதியுள்ளார்.