TNPSC குரூப் 1 தேர்வாளர்களுக்கான வயது வரம்பு உயர்வு!

TNPSC குரூப் 1 தேர்வாளர்களுக்கான வயது வரம்பை உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு விடுத்துள்ளார்!

Last Updated : Jun 1, 2018, 11:42 AM IST
TNPSC குரூப் 1 தேர்வாளர்களுக்கான வயது வரம்பு உயர்வு! title=

சென்னை: TNPSC குரூப் 1 தேர்வாளர்களுக்கான வயது வரம்பை உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு விடுத்துள்ளார்!

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தின் போது உறையாற்றி அவர் TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 1 தேர்வு எழுதும் தேர்வாளர்களுக்கான வயது வரம்பை உயர்த்தி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி SC., ST., பிரிவு தேர்வாளர்களுக்கான வயது வரம்பு 35-லிருந்து 37-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிற பிரிவினருக்கு 30-ல் இருந்து 32-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த மாற்றமானது குரூப் 1, 1ஏ, 1பி தேர்வை எழுதுவோருக்கு பொருந்தும் எனவும், DSP துணை ஆட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகள் நிரப்பப்படும் TNPSC குரூப் 1 தேர்வாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வயது வரம்பு உயர்வினை குறித்து பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்த வன்னம் இருந்ததால் இந்த அறிவிப்பு கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக அரசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது குரூப் 1 தேர்வு எழுத முன் வரும் கிராமப்புற மாணவர்களுக்கு மிகுவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News