7th Pay Commission: 4% அகவிலைப்படி உயர்வால் ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும்?

7th Pay Commission: 4% அகவிலைப்படி உயர்வால் கிட்டத்தட்ட 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.  

Written by - RK Spark | Last Updated : Mar 29, 2023, 06:59 AM IST
  • ரூ.42,000 சம்பளம் வாங்குவோருக்கு கிடைக்கும் அகவிலைப்படி ரூ.9,690 ஆக இருக்கும்.
  • அடிப்படை ஓய்வூதியம் ரூ.25,200 ஆக இருந்தால் கிடைக்கும் டிஆர் ரூ.9,576 ஆக இருக்கும்.
  • டிஏ உயர்வால் 47.58 லட்சம் ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
7th Pay Commission: 4% அகவிலைப்படி உயர்வால் ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும்? title=

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணம் (டிஆர்) உயர்வு குறித்து செய்திகள் வெளியானது.  கடந்த வாரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 4% டிஏ/டிஆர் உயர்த்தி அறிவிப்பினை வெளியிட்டது.  இந்த  உயர்வால், மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ/டிஆர் விகிதம் 42% ஆக உயரும்.  அகவிலைப்படி உயர்வால் கிட்டத்தட்ட 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.  மத்திய அரசின் 4% அகவிலைப்படி உயர்வால் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத் தொகையும் உயரப்போகிறது.  

மேலும் படிக்க | ITR Advice: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள்

உதாரணமாக ஒரு அரசு ஊழியர் ரூ.25000 அடிப்படை சம்பளத்தில் ரூ.42,000 சம்பாதிக்கிறார் என்றால் அவருக்கு கிடைக்கும் அகவிலைப்படி ரூ.9,690 ஆக இருக்கும்.  சமீபத்திய 4 சதவீத டிஏ உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களுக்கான டிஏ தொகை ரூ.10,710 ஆக உயரும்.  இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரூ.1020 உயரும்.  டிஆர் 4% உயர்த்தப்பட்ட பிறகு ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் உயர்வு கிடைக்கும்.  உதாரணமாக ஓய்வூதியம் பெறுபவரின் அடிப்படை ஓய்வூதியம் ரூ.25,200 ஆக இருந்தால் அவருக்கு டிஆர் ரூ.9,576 கிடைக்கும்.  

இப்போது டிஆர் 42% உயர்த்தப்பட்டுள்ளதால் அவர்களுக்கான மொத்த டிஆர் ரூ.10,584 ஆக இருக்கும்.  டிஏ/டிஆர் உயர்வு குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.12,815.60 கோடி பாதிப்பு ஏற்படும்.  டிஏ மற்றும் டிஆர் ஆகியவற்றின் கூடுதல் தவணை ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | Post Office FD vs NSC:வரியை சேமிக்க உங்களுக்கு ஏற்ற திட்டம் எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News