வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் விருப்பமான ரயில்களில் ஒன்றாகும். இது மிக மிக வசதியான பயணம் மற்றும் குறைவான கட்டணம் கொண்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 2019 இல் முதன்முதலில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. செப்டம்பர் 24, 2023 நிலவரப்படி இந்தியாவில் 34 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளன. நகரங்களுக்கிடையிலான இணைப்பை மேம்படுத்த, பல புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களும் அதிக அளவில் தொடங்கப்பட்டு வருகின்றன. முதன்முறையாக, வந்தே பாரத் பயணிகளின் வயது மற்றும் பாலினம் அடிப்படையில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான தேவையை ரயில்வே மதிப்பிட்டு வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடங்கப்பட்டதன் மூலம் விமானக் கட்டணம் 20-30% குறைந்துள்ளது. இது பற்றி மேலும் அறிய:
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடங்கப்பட்ட பிறகு விமான கட்டணம் 20-30% குறைந்துள்ளது
மத்திய ரயில்வேயின் (CR) பிஆர்ஓ சிவராஜ் மனாஸ்புரே வந்தே பாரத் ரயில் சேவை குறித்து குறிப்பிடுகையில், “இந்த காலகட்டத்தில் வந்தே பாரத் ரயிலில் பயணித்த குழந்தைகளின் (1-14 வயது) சராசரி எண்ணிக்கை சுமார் 5% ஆக இருந்தது, திருநங்கைகள் மொத்தத்தில் 4.5% பயணம் செய்துள்ளது. மேலும், தொழில்துறை மதிப்பீடுகளின்படி, வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்ட பிறகு விமானப் போக்குவரத்தில் 10-20% பெரும் சரிவும், விமானக் கட்டணங்களில் 20%-30% சரிவும் ஏற்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்ப்பட்ட வழிகளில் விமான கட்டணம் குறைந்து வருவதற்கான முக்கிய காரணம், வந்தே பாரத் ரயில்கள் பயண நேரம் மற்றும் கட்டணம். விமான பயணத்தை போன்ற சொகுசு பயணத்தை வழங்குவதோடு, விமான கட்டணத்துடன் ஒப்பிடுகையில் கட்டணம் குறைவாக உள்ளது. மேலும் விமான பயணம் மேற்கொள்ளும் போது 2 மணி நேரம் முன்னதாகவே விமான நிலையம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதையும் சேர்த்து கணக்கிடும் போது வந்தே பாரத் பயண நேரம் அவ்வளவாக அதிகமாக இல்லாததால், மக்கள் விமானத்திற்கு பதிலாக வந்தே பாரத் ரயிலை தேர்ந்தெடுக்கின்றனர். வேகம் மற்றும் தொழில்நுட்பத்துடன் அதிகரித்து வரும் தேவையை எதிர்கொள்ள இந்திய ரயில்வே தயாராகி வருகிறது. மேலும் பல புதிய வந்தே பாரத் ரயில் வழித்தடங்களைத் தொடங்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்: வயது, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் டிமாண்ட் மதிப்பீடு
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, பயணிகளின் பாலினம் மற்றும் வயது அடிப்படையில் வந்தே பாரத் ரயில்களுக்கான தேவையை கண்காணிப்பது குறித்து முதல் முறையாக ரயில்வே பரிசீலித்து வருகிறது. மத்திய ரயில்வே (CR) சேகரித்த தரவுகளின்படி, மும்பையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் 31-45 வயதுக்குட்பட்டவர்கள், அதைத் தொடர்ந்து 15-30 வயதுடையவர்கள். செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 13 வரை மும்பையிலிருந்து ஷீரடி, மும்பையிலிருந்து கோவா மற்றும் மும்பையிலிருந்து சோலாப்பூருக்குச் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயணிகளின் பாலின வாரியான தரவுகளும் CR தரவுகளில் அடங்கும்.
மேலும் படிக்க | இனி சென்னை - பெங்களூரு சீக்கிரமே போகலாம்... செம வேகத்தில் இனி ரயில்கள் பறக்கும்!
இந்த காலகட்டத்தில் 85,600 ஆண் பயணிகளும், 26 திருநங்கைகளும், 57,838 பெண் பயணிகளும் இருந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ரயில்வேயும் ரயில்களை பிரபலமாக்கவும், பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முயற்சிக்கிறது; செப்டம்பரில் மும்பையிலிருந்து ஷீரடி, மட்கான் மற்றும் சோலாப்பூருக்கு வந்தே பாரத் ரயில்களின் ஆக்கிரமிப்பு தரவு 77-101% இடையே உள்ளது.
மேலும் படிக்க | ரயில் ஏசி இருக்கை டிக்கெட் கட்டண குறைப்பு! ஆனால் சில நிபந்தனைகள் உண்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ