பான் கார்டு வைத்திருப்போர் கவனதிற்கு! இதை உடனடியாக செய்யுங்கள்!

இந்திய அரசின் விதிகளின்படி ஒரு நபர் ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க வேண்டும், அதுவே நீங்கள் இரண்டு பான் கார்டுகள் வைத்திருந்தால் உங்களுக்கு அதிகமாக அபராதம் விதிக்கப்படும்.   

Written by - RK Spark | Last Updated : Oct 13, 2022, 10:55 AM IST
  • ஒரு நபர் ஒரு பான் கார்ட் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.
  • இரண்டு பான் கார்ட் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும்.
  • வருமான வரித்துறை இதற்கு அபராதம் விதிக்க கூடும்.
பான் கார்டு வைத்திருப்போர் கவனதிற்கு! இதை உடனடியாக செய்யுங்கள்!

பான் கார்டு என்பது கட்டாயமாக அனைவரும் வைத்திருக்க வேண்டிய ஒரு முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது,  பணப்பரிவர்த்தனை தொடங்கி பலவிதமான அதிகாரபூர்வ வேலைகளுக்கு பான் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாக செயல்படுகிறது.  இப்போதெல்லாம் வங்கியில் கணக்கு தொடங்குவதற்கு முதல் ஆவணமாக பான் கார்டு தான் கேட்கப்படுகிறது, குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவும் பான் கார்டு தேவைப்படுகிறது.  வங்கி மட்டுமல்லாது பல அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் நடக்கும் பணபரிவர்தனைக்கு பான் கார்டு தான் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.  பான் கார்டு விஷயத்தில் மக்கள் அடிக்கடி சில தவறுகளை செய்து வருகின்றனர், அப்படி மக்கள் சில விஷயங்களில் செய்யும் தவறுகள் காரணமாக சில சமயங்களில் அவர்களுக்கு பெரிய நிதி இழப்புகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | ஆன்லைன் மூலம் இ-பான் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி?

இந்திய அரசின் விதிகளின்படி ஒரு நபர் ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க வேண்டும், அதுவே நீங்கள் இரண்டு பான் கார்டுகள் வைத்திருந்தால் உங்களுக்கு அதிகமாக அபராதம் விதிக்கப்படும்.  வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 272பி-ன் படி உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ மற்றும் உங்கள் வங்கிக் கணக்கை முடக்கவோ அதிகாரம் உள்ளது.  இதுமட்டுமின்றி நீங்கள் ரூ.10,000 அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும், அதேசமயம் இரண்டு பான் கார்டுகள் வைத்திருப்பவர்கள் அபராதம் செலுத்தாமல் இருப்பதற்கும் ஆப்ஷன் உள்ளது.  அதாவது நீங்கள் வைத்திருக்கும் இரண்டாவது பான் கார்டை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்துவிட வேண்டும், இப்போது பான் கார்டை ஒப்படைக்கும் செயல்முறை பற்றி இங்கே காண்போம்.

1) வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான www.incomettaxindia.gov.com என்பதற்கு செல்லவும்.

2) 'புதிய பான் கார்டுக்கான கோரிக்கை மற்றும் பான் டேட்டாவில் மாற்றங்கள் அல்லது திருத்தம்' என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3) இப்போது படிவத்தைப் டவுன்லோடு செய்யவும்.

4) படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பவும்.

5) எந்தவொரு என்எஸ்டிஎல் அலுவலகத்திற்கும் சென்று படிவத்தை சமர்ப்பிக்கலாம்.

6) நிரப்பப்பட்ட படிவத்துடன் சேர்த்து நீங்கள் வைத்திருக்கும் இரண்டாவது பான் கார்டையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | உங்கள் பான்கார்டில் மோசடியா? சிபில் ஸ்கோர் பாதிக்கும்; கண்டுபிடிக்க வழி

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News