Bank Holidays: வரிசையாக வங்கி விடுமுறை, பணிகளை இப்போதே முடித்துக்கொள்ளுங்கள்

Bank Holidays In August: இன்று முதல் 5 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 19, 2021, 11:55 AM IST
Bank Holidays: வரிசையாக வங்கி விடுமுறை, பணிகளை இப்போதே முடித்துக்கொள்ளுங்கள் title=

புது டெல்லி: Bank Holidays In August: ரிசர்வ் வங்கி வழங்கிய விடுமுறை பட்டியலில் சில பிராந்திய விடுமுறைகளும் உள்ளன. அதாவது, அந்த நாளில் சில மாநிலங்களில் மட்டுமே வங்கிகள் மூடப்படும், மற்ற இடங்களில் திறந்திருக்கும்.

ஆகஸ்டில் 15 விடுமுறை நாட்கள் வரும்
ஆகஸ்டில் விழும் 15 விடுமுறை நாட்களில், 6 விடுமுறைகள் கடந்துவிட்டன, மீதமுள்ள 9 விடுமுறைகள் எஞ்சியுள்ளன. சில பிராந்திய விடுமுறைகள் மற்றும் சில வழக்கமான விடுமுறைகள் உள்ளன. பிராந்திய விடுமுறை நாட்களில் சில மாநிலங்களில் மட்டுமே வங்கிகள் (Banks Holiday) மூடப்படும், மற்ற இடங்கள் திறந்திருக்கும். முன்னதாக, ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 16 வரை, வங்கிகள் தொடர்ந்து நான்கு நாட்கள் மூடப்பட்டன. எனவே நீங்களும் ஏதாவது வேலை செய்ய விரும்பினால், இந்த விடுமுறை நாட்களின் பட்டியலை இன்று சரிபார்க்கவும்.

ALSO READ: டெபிட், கிரெடிட் கார்ட் மூலம் கட்டணம் செலுத்துகிறீர்களா? இந்த விதிகள் மாறவுள்ளன!!

இன்று முதல் 5 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்
இன்று ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 23 வரை, அதாவது, வங்கிகள் முழு 5 நாட்களும் பூட்டப்பட்டிருக்கும். இன்று முஹர்ரம் காரணமாக வங்கிகளில் இயங்காது. அகர்தலா, பெலாப்பூர், ஜம்மு, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், பாட்னா, ராய்பூர் மற்றும் ஸ்ரீநகர் வங்கிகள் இந்த நாளில் மூடப்படும். இதற்குப் பிறகு, புது டெல்லி, லக்னோ, அகமதாபாத், கான்பூர், போபால், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ராஞ்சி, பெங்களூர், சென்னை, கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் ஆகஸ்ட் 20 அன்று வங்கிகள் மூடப்படும். கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் ஆகஸ்ட் 21 திருவோணத்தன்று மற்றும் ஆகஸ்ட் 23 அன்று ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தியை முன்னிட்டு வங்கி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

19 ஆகஸ்ட் - முஹர்ரம் (ஆஷுரா) - அகர்தலா, பெலாப்பூர், ஜம்மு, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், பாட்னா, ராய்பூர் மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடல்.
20 ஆகஸ்ட் - முஹர்ரம் - புதுடெல்லி, லக்னோ, அகமதாபாத், கான்பூர், போபால், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ராஞ்சி, பெங்களூர், சென்னை, கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடல்.
21 ஆகஸ்ட் - திருவோணம்- கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடல்.
22 ஆகஸ்ட் - ஞாயிற்றுகிழமை 
23 ஆகஸ்ட் - ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி - கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடல்.

மாத இறுதியில் வங்கிகள் 4 நாட்களுக்கு மூடல்
28, ஆகஸ்ட் 2021 - நான்காவது சனிக்கிழமை 
29, ஆகஸ்ட் 2021 - ஞாயிற்றுகிழமை 
30, ஆகஸ்ட் 2021 - திங்கட்கிழமை - ஜன்மாஷ்டமி
30 ஆகஸ்ட் - ஜன்மாஷ்டமி/கிருஷ்ண ஜெயந்தி - அகமதாபாத், சண்டிகர், சென்னை, டேராடூன், காங்டாக், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா மற்றும் ஸ்ரீநகர்.
31 ஆகஸ்ட் - ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி - ஐதராபாத்.

ALSO READ: வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரிய அடி: ஏப்ரல் 1 முதல் OTP பெறுவதில் பிரச்சனை வரும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News