Employee Bonus Announced: தீபாவளி என வந்துவிட்டாலே பலருக்கும் பட்டாசு, புது துணி, இனிப்புகள், கொண்டாட்டம், தெய்வ வழிபாடு ஆகியவை தான் நியாபகம் வரும். ஆனால், நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கண்டிப்பாக தீபாவளி என்றாலே போனஸ் தான் நிச்சயம் நியாபகம் வரும். தீபாவளி போனஸை பெற்றால் தான் நடுத்தர குடும்பத்தினர் மேல் சொன்ன பட்டாசு, புது துணி, இனிப்புகளை வாங்கி தீபாவளியை கொண்டாடு இயலும்.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உள்பட சலுகை அளிக்கப்படும் அதே வேளையில், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி சமயத்தில் தான் சலுகைகள் வழங்கப்படுகின்றன. எனவே, தீபாவளி நெருங்கும் வேளையில் ஊழியர்கள் அனைவரும் போனஸை எதிர்பார்த்து தான் காத்திருப்பார்கள். அந்த வகையில், ஒரு தனியார் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கான போனஸ் குறித்த அறிவிப்பை தீபாவளிக்கு முன் வெளியிட்டிருப்பது பல்லாயிரகணக்கானோருக்கு குதூகலத்தை அளித்துள்ளது எனலாம்.
தீபாவளியை முன்னிட்டு, ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு டாடா ஸ்டீல் நிறுவனம் பம்பர் போனஸை அறிவித்துள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனம், தனது ஊழியர்களுக்கு மொத்தமாக ரூ.300 கோடிக்கு மேல் போனஸ் அறிவித்துள்ளதால், ஊழியர்களின் முகமும் மலர்ந்துள்ளதாக தெரிகிறது.
மேலும் படிக்க | அரசின் பரிசு.. பெண்களுக்கான ஜாக்பாட் சேமிப்பு திட்டம்: 2 ஆண்டுகளில் பம்பர் லாபம்!!
தனியார் எஃகு நிறுவனமான டாடா ஸ்டீல், டாடா தொழிலாளர் சங்கத்துடன் (TW) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, 2022-2023ஆம் ஆண்டிற்கான ஊழியர்களுக்கு ஆண்டு போனஸாக மொத்தம் ரூ.314.70 கோடி ஒதுக்குவதாக அறிவித்தது. இதுகுறித்து டாடா ஸ்டீல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் நிறுவனத்தின் அனைத்து பொருத்தமான பிரிவுகளின் தகுதியான ஊழியர்களுக்கு ஆண்டு போனஸாக வழங்கப்படும், அதன் மொத்தத் தொகை ரூ.314.70 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம்
2022-23ஆம் ஆண்டுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வருடாந்திர போனஸ் முறையே ரூ.42 ஆயிரத்து 561 மற்றும் ரூ.4 லட்சத்து 61 ஆயிரத்து 19 ஆக இருக்கும். இதுதொடர்பாக, ஜாம்ஷெட்பூர் துணை தொழிலாளர் ஆணையர் ராகேஷ் பிரசாத் முன்னிலையில், தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மற்றும் நிர்வாக இயக்குனர் TV நரேந்திரன், துணைத் தலைவர் (HRM) ஆத்ரேயி சன்யால் மற்றும் நிர்வாகத்தின் சார்பாக மற்ற மூத்த அதிகாரிகள் மற்றும் தலைவர் சஞ்சீவ் குமார் சவுத்ரி, பொதுச் செயலாளர் சதீஷ்குமார் சிங், TWU மற்றும் இதர நிர்வாகிகள் தொழிற்சங்கம் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
டாடா ஸ்டீல் பங்கு விலை
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு விலையும் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது உயர்ந்து உள்ளது. மேலும் பங்கு விலையில் ஏற்றம் காணப்படுகின்றது. செப்டம்பர் 5ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி, டாடா ஸ்டீல் பங்கு விலை ரூ. 130க்கு மேல் இருந்தது. அதேசமயம் என்எஸ்இ-யில் டாடா ஸ்டீல் பங்குகளின் 52 வார அதிகபட்ச விலை ரூ. 132.90 மற்றும் அதன் 52 வாரக் குறைந்த விலை ரூ. 95 ஆகும்.
மேலும் படிக்க | ரிசர்வ வங்கி அளித்த நல்ல செய்தி: UPI-இல் இனி இதையும் செய்ய அனுமதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ