பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்பட்டால் சமூகநீதி நிலைநாட்டப்படும்! ஆய்வு சொல்லும் உண்மை

Social Justice And Wealth Tax: மக்களிடையே பொருளாதார ரீதியாக நிலவும் சமத்துவமின்மையைச் சமாளிக்க இந்தியா அதி-செல்வந்தர்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்று கூறும் ஆய்வு! ஆய்வு சொல்லும் நிதர்சன உண்மைகள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 25, 2024, 10:34 AM IST
  • இந்தியர்களிடையே பொருளாதார சமத்துவம்
  • 0.04 சதவிகித பணக்காரர்கள்
  • சமூக நீதியை நிலைநாட்டுமா செல்வ வரி
பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்பட்டால் சமூகநீதி நிலைநாட்டப்படும்! ஆய்வு சொல்லும் உண்மை title=

Economic Study On Social Justice: 'இந்தியாவில் உள்ள தீவிர ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிப்பதற்கான ஒரு செல்வ வரித் தொகுப்புக்கான முன்மொழிவுகள்' (Proposals For a Wealth Tax Package to Tackle Extreme Inequalities in India) என்ற தலைப்பில் வெளியான அண்மைக் கட்டுரை, மக்களிடையே நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு இடைவெளிகளை சமாளிப்பதற்கும், சமூகத் துறை முதலீடுகளுக்கு குறிப்பிட்ட பங்களிப்பை உருவாக்குவதற்கும் உள்ள தேவையை சுட்டிக் காட்டுகிறது. இதற்காக, பணக்காரர்கள் மீது செல்வ வரி விதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு முன்மொழிகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த வரி விதிக்கப்பட்டால், அதை இந்தியர்களில் 0.04 சதவிகிதத்தினர் மட்டுமே கட்ட வேண்டும். 99.96 சதவீத அளவிலான மக்களுக்கு இந்த வரியினால் பாதிப்பு இருக்காது என்று இந்த ஆய்வு கூறுகிறது.

யாருக்கு செல்வ வரி விதிக்கப்பட வேண்டும்?

பணக்காரர்களில் 10 கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்து வைத்திருப்பவர்களுக்கு 2 சதவீத வரியும், 33 சதவீத பரம்பரை வரியும் (inheritance tax) விதிக்க வேண்டும் என்று புதிய ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. 

பொருளாதார வல்லுனர் தாமஸ் பிகெட்டி பரிந்துரை

'இந்தியாவில் நிலவும் தீவிரமான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிப்பதற்கான ஒரு செல்வ வரித் தொகுப்புக்கான முன்மொழிவுகள்' என தலைப்பிடப்பட்டுள்ள கட்டுரை, செல்வப் பகிர்வில் உள்ள வேறுபாடுகள், மலைக்கும் மடுவுக்கும் இடையிலானதாக மிகப் பிரம்மாண்டமானதாக இருப்பதால், சமூகத் துறை முதலீடுகளை உருவாக்க மிகப் பெரிய பணக்காரர்கள் வரி செலுத்துவதில் தவறில்லை என்று இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில், பொருளாதார வல்லுனர் தாமஸ் பிகெட்டியும் பங்களித்துள்ளார்.

மேலும் படிக்க | CUR: கடன் அட்டையில் கடன் வரம்பை அதிகரிப்பது நல்லதா? கிரெடிட் கார்டு டிப்ஸ்!
 
"ஒரு அடிப்படை சூழ்நிலையில், 10 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள நிகர சொத்து மீது 2 சதவீத வருடாந்திர வரியும், ரூ. 10 கோடிக்கு மேல் மதிப்புள்ள எஸ்டேட்டுகளுக்கு 33 சதவீத பரம்பரை வரியும் விதிப்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வருவாயில் 2.73 சதவீதத்தை உருவாக்கும்...." என்று இந்த ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.  

ஏழைகள், பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு நன்மை செய்யும் வகையில், வெளிப்படையான மறுபகிர்வு கொள்கைகளுடன் செல்வத்தின் மீதான வரிவிதிப்பு கொள்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஆய்வு பரிந்துரைக்கிறது. 

செல்வ வரி விதிக்கப்படும்போது, கல்விக்காக அரசு தற்போது செய்யும் செலவுகளை இரு மடங்காக உயர்த்தலாம். கடந்த 15 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.9 சதவீதத்தில் தேக்கமடைந்துள்ளது, அரசாங்கத்தின் சொந்த தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) மேம்படுத்தவும் இந்த வரி உதவலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

கொள்கை வடிவமைப்பு
இந்தியாவில் வரி நீதி மற்றும் செல்வ மறுபகிர்வு தொடர்பான ஜனநாயக விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.  விரிவான விவாதங்களும், ஒருமித்த கருத்துக்கள் கொண்ட முடிவாகவும் இந்த வரி இருப்பது நல்லது என்று ஆய்வு கூறுகிறது.

மேலும் படிக்க | மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்புகள் அதிகமாகியது! EPFO சொல்லும் Payroll தரவுகள்!  
 
தாமஸ் பிகெட்டி (பாரிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மற்றும் உலக சமத்துவமின்மை ஆய்வகம்), லூகாஸ் சான்சல் (ஹார்வர்ட் கென்னடி பள்ளி மற்றும் உலக சமத்துவமின்மை ஆய்வகம்), அன்மோல் சோமஞ்சி, (பாரிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மற்றும் உலக சமத்துவமின்மை ஆய்வகம்) மற்றும் நிதின் குமார் பார்தி என பல பொருளாதார வல்லுநர்கள் இந்த கட்டுரைக்கு பங்களித்துள்ளனர்.

இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் 

நாட்டில் தீவிர ஏற்றத்தாழ்வுகள் சமூக நீதியை சீர்குலைக்கினிறன. சமூக அநீதியுடன் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு உள்ள நெருங்கிய தொடர்பை இனியும் புறக்கணிக்க முடியாது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

இந்த முற்போக்கான செல்வ வரி விதிப்பானது, பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பலனளிக்கும் வகையில் இருக்கும், மிகவும் குறைவான எண்ணிக்கையிலான பணக்கார உயர் சாதிக் குடும்பங்களுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்கும் என்றும் ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர்.

2000 களின் முற்பகுதியில் இருந்து இந்தியாவில் சமத்துவமின்மை உயர்ந்துள்ளது என்றும், 2022ஆம் ஆண்டில் இருந்து 1 சதவீத மக்கள் தொகையின் வருமானம் மற்றும் செல்வத்தின் பங்கு முறையே 22.6 சதவீதம் மற்றும் 40.1 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று இதற்கு முன்னதாக ஒரு ஆய்வு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | காஞ்சீபுரம் பட்டுச்சேலைகளின் விலை 50% உயர்வால் விற்பனையில் சரிவு! அதிர்ச்சியில் நெசவாளர்கள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News