இந்தியாவில் இருக்கும் பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா. இது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை பெற்ற பிராண்டாகவும் இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையில் கோலோச்சும் இந்த நிறுவனம் முதலீடு மற்றும் ரேசிங் துறையிலும் கால்பதித்திருக்கிறது என்பது பலருக்கு வியப்பான தகவலாக கூட இருக்கலாம். அதனால், மகிந்திரா நிறுவனத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தெரிந்து கொள்வோம்
மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தியாளர்
டிராக்டர் உற்பத்தி செய்யும் நிறுவனம் மஹிந்திரா என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அதிக டிராக்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் மஹிந்திரா தான் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் மட்டுமல்ல, வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய சந்தைகளிலும் மகிந்திரா நிறுவனத்தின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 1,50,000 டிரக்குகளை ஆண்டுக்கு உற்பத்தி செய்கிறது மகிந்திரா நிறுவனம்.
மேலும் படிக்க | பாலிசிதாரர்கள் கவனத்திற்கு... எல்ஐசி வழங்கும் வாட்ஸ்அப் சேவை - முழு விவரம்!
முதல் எலக்டிரிக் கார் பிராண்டு மகிந்திரா
இந்தியா இப்போது எலக்டிரிக் கார் சந்தையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் கார்களின் பயன்பாடு குறைந்து சாலை முழுவதும் எலக்டிரிக் கார்கள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கப்போகிறது. இதனை முன்பே கணித்த மகிந்திரா நிறுவனம், இந்தியாவில் முதல் எலக்ரிடிக் கார் நிறுவனத்தை தொடங்கியது. நாட்டில் முதன் முதலாக தொடங்கப்பட்ட REVA எலக்ட்ரிக் கார் நிறுவனம் மகிந்திரா நிறுவனத்துக்கு சொந்தமானது. 2010 ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், 2013-ல் e20 எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கை உருவாக்கியது.
Peugeot மோட்டார் சைக்கிள்கள்
கார் மற்றும் டிரக்குகள் உற்பத்தியில் இருக்கும் மகிந்திரா நிறுவனம் அடுத்ததாக இருசக்கர வாகன உற்பத்தியிலும் கால் பதித்தது. Peugeot மோட்டார் சைக்கிள்ஸ் என்ற இரு சக்கர வாகன துணை நிறுவனம் மகிந்திராவுக்கு சொந்தமானது. 2014-ல் பியூஜியோ மோட்டார் சைக்கிள்களில் பெரும்பான்மையான (51 சதவீதம்) பங்குகளை வாங்கிய மஹிந்திரா, 2019-ல் முழு நிறுவனத்தையும் சொந்தமாக்கியது.
மஹிந்திராவின் விலையுயர்ந்த கார்கள்
மஹிந்திரா ரேஸ் கார்கள் உற்பத்தியிலும் உள்ளது. ஃபெராரி 275ஜிடிபி, எஃப்40, எஃப்50 மற்றும் 550 மரனெல்லோ போன்ற கார்களை வடிவமைக்கும் இத்தாலிய டிசைன் ஹவுஸ் இப்போது மஹிந்திராவுக்குச் சொந்தமானது. இது தவிர, மஹிந்திரா நிறுவனம் பினின்ஃபரினா பாட்டிஸ்டா எலக்ட்ரிக் ஹைப்பர்காரையும் தயாரிக்கிறது. இந்த எலக்ட்ரிக் ஹைப்பர் கார் 1,877 பிஎச்பி பவரையும், 2,300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
மஹிந்திரா ரேசிங்
பெரும்பாலான கார் உற்பத்தியாளர்கள் தங்களுக்கென ஒரு பந்தயக் குழுவைக் கொண்டுள்ளனர். ஆனால் ஃபார்முலா E உலக சாம்பியன்ஷிப்பில் மஹிந்திரா இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதுமட்டுமின்றி, ஃபார்முலா இ உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே அணி மஹிந்திரா ரேசிங் மட்டுமே. 2017-ல், மஹிந்திரா ரேசிங் பெர்லின் எலக்ட்ரிக் ரேஸை வென்றது.
மஹிந்திரா முதலீடு
நம்மில் பலர் மஹிந்திராவை ஒரு SUV உற்பத்தியாளராகப் பார்த்தாலும், நிறுவனம் கடந்த இரண்டு தசாப்தங்களில் ஏராளமான முதலீடுகளை செய்துள்ளது. அதுமட்டுமின்றி சில நிறுவனங்களை முழுமையாகவும் கையகப்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் உலகளாவிய ஆட்டோமொபைல் நிறுவனமாக படிப்படியாக வளர்ந்து கொண்டே வருகிறது. அண்மைக்காலமாக மஹிந்திராவின் தயாரிப்புகள் அதிக விற்பனையை எட்டி வருகின்றன.
மேலும் படிக்க | கார் திருடப்பட்டாலும் பைசா செலவில்லாமல் புதிய கார் வாங்கலாம்..! இதோ வழிமுறை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ