LIC பாலிசிதாரர்களுக்கு good news: Maturity Document-ஐ எந்த கிளையிலும் சமர்பிக்கலாம்

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான LIC மீது நாட்டின் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர். காப்பீட்டு வணிகத்தில் பல நிறுவனங்கள் இருக்கின்றன. எத்தனை நிறுவனங்கள் போட்டியாக வந்தாலும், காப்பீட்டு வணிகத்தில் LIC முதலிடத்தில் உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 19, 2021, 12:34 PM IST
  • LIC நாடு முழுவதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது.
  • LIC மீது நாட்டின் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.
  • இந்திய நாடாளுமன்றம் 1956 இல் ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டத்தை அமலாக்கியது.
LIC பாலிசிதாரர்களுக்கு good news: Maturity Document-ஐ எந்த கிளையிலும் சமர்பிக்கலாம் title=

Life Insurance Corporation: நாட்டின் மிகப்பெரிய அரசாங்க ஆயுள் காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிவாரணத்தை வழங்கியுள்ளது. LIC மெச்யூரிட்டி பாலிசியின் தொகையை கோர (LIC Policy Maturity Claim) நாடு முழுவதும் உள்ள எந்த LIC கிளையிலும் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். எனினும், மெச்யூரிட்டி தொகை கோரலின் பிராசசிங் செயல்முறை அவரவரது பிரதான கிளை மூலமே செய்யப்படும். 

டிஜிட்டல் முறையில், வாடிக்கையாளர்கள் எந்த கிளையில் டெபாசிட் செய்தாலும், அந்த கிளை, அந்த ஆவணங்களை பிரதான கிளைக்கு அனுப்பும். 

LIC நாடு முழுவதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளையும், 1500 க்கும் மேற்பட்ட சேட்டிலைட் அலுவலகங்களையும் 74 வாடிக்கையாளர் மண்டலங்களையும் கொண்டுள்ளது. LIC 29 கோடிக்கும் அதிகமான பாலிசிகளைக் கொண்டுள்ளது.

LIC மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான LIC மீது நாட்டின் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர். காப்பீட்டு வணிகத்தில் பல நிறுவனங்கள் இருக்கின்றன. எத்தனை நிறுவனங்கள் போட்டியாக வந்தாலும், காப்பீட்டு (Insurance) வணிகத்தில் LIC முதலிடத்தில் உள்ளது. LIC-யில் முதலீடு செய்யும் மக்கள் தங்கள் பணத்தை ஒருபோதும் இழக்க வெண்டிய நிலை ஏற்படாது என்று மக்கள் அபார நம்பிக்கைக் கொண்டுள்ளனர். LIC மக்களுக்கான ஒரு நம்பகமான காப்பீட்டு நிறுவனமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சாமானியர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் நிறுவனமாகவும் உள்ளது. 

ALSO READ: LIC IPO அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாய் அமையும், முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்கும்

இங்கிலாந்திலிருந்து வந்தது இந்த நிறுவனம் 

காப்பீட்டு நிறுவனங்கள் 1818 களில் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்தன. இந்தியாவின் முதல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஐரோப்பியர்களால் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில் அதன் பெயர் ஓரியண்டல் லைஃப் இன்சூரன்ஸ் என்றிருந்தது. எனினும், அந்த நேரத்தில், காப்பீட்டு நிறுவனங்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு காப்பீடு செய்யாமல் இருந்தன. ஆனால் சில காலம் சென்றபின், பாபு முத்திலால் சீல் போன்ற பெரிய மனிதர்களின் முயற்சியால், வெளிநாட்டு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் (Insurance Companies) இந்தியர்களுக்கும் காப்பீடு வழங்கத் தொடங்கின. முதல் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் அடித்தளம் 1870 ஆம் ஆண்டில் மும்பை மியூச்சுவல் லைஃப் இன்சூரன்ஸ் சொசைட்டி என்ற பெயரில் போடப்பட்டது.

இந்திய நாடாளுமன்றம் 1956 இல் ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டத்தை அமலாக்கியது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், செப்டம்பர் 1, 1956 அன்று, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் என்ற காப்பீட்டு நிறுவனம் உருவானது.

ALSO READ: IRDAI அளிக்கும் அட்டகாசமான வாய்ப்பு: ப்ரீமியத்தில் தள்ளுபடி, வட்டி எல்லாம் கிடைக்கும்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News