Google Pay பயனர்களுக்கு அதிர்ச்சி.. இனி Google Pay மூலம் பண பரிமாற்ற செய்ய கட்டணம்..!

கூகிள் பே ஜனவரி 2021 முதல் Peer to Peer கட்டணம் வசதியை நிறுத்தப் போகிறது. அதற்கு பதிலாக, ஒரு உடனடி பண பரிமாற்ற கட்டண முறை நிறுவனம் சேர்க்கப்படும்..!

Last Updated : Nov 25, 2020, 09:55 AM IST
Google Pay பயனர்களுக்கு அதிர்ச்சி..  இனி Google Pay மூலம் பண பரிமாற்ற செய்ய கட்டணம்..! title=

கூகிள் பே ஜனவரி 2021 முதல் Peer to Peer கட்டணம் வசதியை நிறுத்தப் போகிறது. அதற்கு பதிலாக, ஒரு உடனடி பண பரிமாற்ற கட்டண முறை நிறுவனம் சேர்க்கப்படும்..!

ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு UPI பயன்முறையில் Google Pay-யை நீங்கள் பயன்படுத்தினால் இந்த எச்சரிக்கை உங்களுக்கானது. Google Pay மூலம் பணத்தை மாற்றுவது இனி இலவசமாக இருக்காது. வங்கி பரிமாற்றத்திற்கு வங்கி இப்போது கட்டணம் வசூலிக்கப்படும் (transfer fee) என்று நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக, நிறுவனம் தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் play.google.com இணைய செயலி மூலம் பணமில்லா பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், ஜனவரி மாதம் முதல் இணைய செயலி சேவை ரத்து செய்யப்படும் என்று கூகுள் நிறுவனம் பயனர்களுக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது. "2021 தொடக்கம் முதல் play.google.com மூலம் மற்றவர்களுக்கு பணம் அனுப்பவோ, அவர்களிடமிருந்து பெறவோ இயலாது. பணம் அனுப்பவும் பெறவும் கூகுள் பே செயலியை பயன்படுத்தவும்" என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ALSO READ | ஜனவரி 1, 2021 முதல் Paytm, Google pay, Phonepe, Jio Pay, Amazon Pay முறையில் மாற்றம்..!

உங்கள் பணத்தை உடனடியாக மாற்றுவதற்கான கட்டணத்தையும் Google Pay அறிமுகம் செய்துள்ளது. "உங்கள் வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றுவதற்கு 1 முதல் 3 பணி நாள்கள் ஆகும். டெபிட் கார்டு மூலமான பரிவர்த்தனை உடனடியாக நடக்கும். டெபிட் கார்டு மூலம் பணத்தை பரிவர்த்தனை செய்யும் போது 1.5% அல்லது 0.31 டாலர் இவற்றுள் எது அதிகமோ அது வசூலிக்கப்படும்" என்று கூகுள் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் ioS பயனர்களுக்கு பல்வேறு சிறப்பம்சங்களை அறிவித்துள்ளது. அவை முதன்முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

Trending News